பக்கம்:மாபாரதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

41

மிகவும் அக்கரையோடு அவன் ஆரம்பக் கல்வி கற்பித் தான். எனினும் அவனினும் மேம்பட்ட ஆசிரியன் ஆகிய துரோணனிடம் சிறப்புப் பயிற்சிபெற வீடுமன் அவர்களை அனுப்பி வைத்தான். இருளைப் போக்க உலகம் திங்களை எதிர்பார்க்கிறது. எனினும் ஒளியும் சக்தியும் பெறச் சூரியனை இவ்வுலகம் விரும்பாமல் இருப்பது இல்லை. அதுபோல வீடுமன் ஆற்றல் மிக்க துரோணனை ஆசிரியனாக அமாத்தினான். கிருபனோடு துரோணன் அவர்களுக்கு ஆசிரியர் ஆயினன்.

துரோணனின் வருகை

பரத்துவாச முனிவரின் மகன் துரோணன் ஆவான், அவன் தன் தந்தையிடம் வேத சாத்திரங்களை முறைப்படி பயின்றான்; பரசுராமனிடம் வில் வித்தைகளைக் கற்றான், பரசுராமனின் ஆசிரமத்தில் படைக்கலம் பயின்ற நாட்களில் பாஞ்சால நாட்டு மன்னன் மகன் துருபதன் என்பவன் ஒரு சாலை மாணாக்கனாக அங்கு அவனுடன் பயின்று வந்தான். இருவரும் நெருங்கிப் பழகினர்; சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

தான் ஆட்சிக்கு வருங்காலத்தில் பாதி அரசு தன் நண்பனாகிய துரோணனுக்குப் பகிர்ந்து அளிப்பதாக வாய் தவறிக் கூறி விட்டான். துரோணனும் அதனை உண்மை என்று நம்பி விட்டான், அதற்காகக் காத்து இருந்தான்.

மலையும் மடுவுமாக வாழ்க்கை பிரிந்து இயங்கியது; அவன் முடிசூடும் மன்னன் ஆனான்; இவன் சுவடி ஏந்தும் ஆசிரியன் ஆனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/44&oldid=1034245" இலிருந்து மீள்விக்கப்பட்டது