பக்கம்:மாபாரதம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மாபாரதம்


ஏகலைவனின் ஆசிரிய மதிப்பு

இதனை அறிந்து விசயன் தன்னினும் மேலவன் ஒருவன் உளன்; அவன் ஏகலைவன் என்றான்.

விசயன் மேல் இருந்த தனிவாஞ்சையால் ஆசிரியன் ஒரு தவறு செய்யத் துணிந்தான்.

ஏகலைவன் இருந்த இடத்துக்கு அருச்சுனனோடு சென்று அவன் வில் திறமையைப் பாராட்டினான்.

“குருவுக்கு நீ தரும் காணிக்கை யாது?” என்று கேட்டான். “உயிர் வேண்டினும் தருகிறேன்” என்றான்.

“உன் கட்டை விரல் தர முடியுமா?” என்றான். ஆசான் சொல்லி முடிப்பதற்குள் எதிர் பேசாமல் அதை வெட்டி அவன் முன் வைத்தான்.

விசயனுக்கு நிகர் மற்றொரு விசயன் வளராதபடி அவன் கற்ற கலையைச் செயல்படாமல் செய்து விட்டான்.

சிறந்த மாணவன் என்பதற்கு ஏகலைவன் எடுத்துக் காட்டாக விளங்கினான். அவன் அதற்காகக் கவலைப் படவில்லை. ஆசிரிய பக்தி இருந்தாலேயே கல்வியில் உயர முடியும் என்பதை அவன் செயல்படுத்திக் காட்டினான். தவறு செய்யும் ஆசிரியர்களும் உளர் என்பதற்குத் துரோணன் ஒரு எடுத்துக்காட்டாக நடந்து கொண்டான்.

படைக்கலப்பயிற்சி

கிருபனிடம் அரை குறையாகக் கற்ற வித்தைகளைத் துரோணனிடம் பயின்று முழுமை அடைந்தனர். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு புதிய செய்திகளை அறிந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/47&oldid=1048292" இலிருந்து மீள்விக்கப்பட்டது