பக்கம்:மாபாரதம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

51

தட்டில் வைத்துத் துருபதனின் மனைவிக்குத் தரும்படி கொடுத்தனர். அவள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அதனை மீண்டும் வேள்வித்தீயில் சொரிந்தனர்; தலைமை ஆசான் ஆகிய உபயாசன் இமைப்பொழுதில் ஒரு மகனைத் தோற்றுவித்தான்.

பிறக்கும்போதே அவன் தேரோடு பிறந்தான். சிலையும் கையுமாகச் சிங்கக் குட்டி போல் தேர் மீது அமர்ந்தபடி தோன்றினான். மற்றும் உபயாசன் தான் பெய்த ஒமச்சருகால் வேள்வித் தீயினின்று ஒரு அழகிய பெண்ணைத் தோற்றுவித்தான். மின்னல் போன்ற இடையும், மூங்கில் போன்ற தோள்களும், முல்லை போன்ற முறுவலும் உடைய தங்க நிறமேனியளாக அவள் காட்சி அளித்தாள்.

முன் தோன்றிய மகனால் துரோணனுக்கு அழிவும், பின்தோன்றிய மகளால் அருச்சுனனுக்குவாழ்வும் ஏற்படும் என்று விண்ணில் தோன்றிய அசரீரி சொல்லியது

துருபதன் துரோணனைக் கொல்ல ஒரு மகனும், வில் திறன் மிக்க விசயனை மணக்க மகளும் வேண்டி இந்த யாகம் செய்தான். வேள்வித்தீயில் பிறந்த வெற்றிச் செல் விக்குத் திரெளபதி என்று பெயரிட்டான். துருபதனின் மகள் ஆதலின் அவள் திரெளபதி எனப்பட்டாள். அவள் தமையன் திட்டத்துய்மன் என அழைக்கப்பட்டான். பிறக்கும் போதே காளைப் பருவத்தில் ஒரு மகனும் கன்னிப்பருவத்தில் ஒரு மகளும் பிறந்தனர்.

திட்டத்துய்மன் வில்வித்தை கற்கத் துரோணன் பால் சென்றான். அவனால் தனக்கு மரணம் நிகழும் என்று அறிந்தும் பகைமை பாராட்டாமல் அவனை மாணவனாகத் துரோணன் ஏற்றுக் கொண்டான். இவ்வகையில் பெருமிதமாக நடந்து கொண்டான். தன்னை அணுகியவர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/54&oldid=1034980" இலிருந்து மீள்விக்கப்பட்டது