பக்கம்:மாபாரதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

மாபாரதம்

ஆதரவு தர வேண்டும் என்ற பரந்த உள்ளமும், வந்தவன் யாராக இருந்தாலும் பயிற்றுவித்தல் ஆசிரியர் தம் கடமை என்ற உணர்வும் போற்றத்தக்கனவாக அமைந்தன.

தருமன் இளவரசன் ஆதல்

இவ்வாறு இங்கே இவர்கள் இனிது வளருங்காலை அத்தினாபுரியில் நூற்றுவரும் ஐவரும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். திருதராட்டிரனும் விதுரனும் ஒழுக்கத்தில் சிறந்த தருமனை இளவரசனாக நியமிக்க எண்ணினர். வீடுமனும் கல்வி கேள்விகளிலும் நீதியிலும் தருமன் உயர்ந்தோன் என்று அவன் தகுதியைப் பாராட்டிப் பேசினான். சந்தனுவின் மரபு சிறக்கத் தருமனுக்கு மணி முடி சூட்டி அவனை இளவரசன் ஆக்கினர்.

துரியோதனின் எதிர்ப்பு

தருமன் இளவரசன் ஆவதைத் துரியானால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதனால் அவனும் அவன் தம்பியரே உயர்வு அடைவர் என்றும், தானும் தன் தம்பியரும் தாழ்வு பெறுவர் என்றும் கூறினான்.

“பாண்டுவுக்கு உரிய இளவரசு அவன் மகனுக்குத் தரு வதுதானே முறை; மற்றும் அவனே நம் குலத்தில் பிறந்த மூத்தவன், அவனுக்கே தகுதி இருக்கிறது.” என்று தந்தை சொல்லிப்பார்த்தான். துரியன் ஏற்றுக் கொள்ளவதாக இல்லை.

“எனக்கு என் இனிய நண்பன் கன்னன் துணை இருக்கிறான்; மாமன் சகுனி உண்டு; என் தம்பியர் துணை இருக்கிறார்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். திறமை உண்டு என்பதால் பெருமை கொண்டு எங்களைக் குறைவாக மதிக்கிறார்கள், அவர்கள் எம்மோடு நேசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/55&oldid=1048298" இலிருந்து மீள்விக்கப்பட்டது