பக்கம்:மாபாரதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மாபாரதம்

யில் தங்கினர். அந்த அமைச்சன் அறிவுரைப்படி அங்கு தங்கி அந்நகருக்குக் காவலனாக இருந்து நன்முறையில் ஆட்சி செய்தான்.

அவர்கள் தங்கி இருந்த மாளிகை அரக்கினால் கட்டப் பட்டிருந்தது. முன்கூட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அவன் நயவஞ்சகமாக நல்லவன்போல் நடித்துத் தீயது செய்யக் காத்திருந்தான். உடன் வந்த சேனையை யும் அவன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான்.

“தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து” என்ற குறளுக்கு இலக்கியமாக நடந்து கொண்டான். அவன் நடத்தைகள் எல்லாம் போலித்தனம் கொண்டிருந்தன.

பாண்டவர்களும் உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும் விழிப்பாக நடந்து கொண்டனர். உடுத்தும் ஆடையிலும், பூசும் சந்தனத்திலும், அணியும் அணிகலன்களிலும் கவனம் செலுத்தினர். அவன் மீது ஒரு கண்வைத்துக் கொண்டு விழிப்போடு வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு இருக்கும் நாளில் விதுரன் அனுப்பி வைத்த சிற்பி ஒருவன் வீமனைத் தனியே சந்தித்தான். அவன் துரியனின் திட்டத்தை எடுத்துச் சொல்லி அதை முன் கூட்டி அறிந்த விதுரன் தன்னை இங்கு அனுப்பியதாகவும், தக்க பாதுகாப்புத் தரும்படி சொன்னதாகவும் கூறினான். அம்மாளிகையில் தப்பிச் செல்லச் சுரங்கப் பாதை ஒன்று தான் அமைத்திருப்பதாகவும் அதில் தப்பிச் செல்ல அட்டைத் தூண் ஒன்று நிர்மாணித்துள்ளதாகவும் கூறினான்.

அரக்கு மாளிகை பற்றி எரியும்போது அத்தூணைப் பெயர்த்துத் தள்ளி அதன் கீழே உள்ள சுரங்க வழியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/57&oldid=1048300" இலிருந்து மீள்விக்கப்பட்டது