பக்கம்:மாபாரதம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

57


“விருந்து வைக்கவா?”

“அருந்தி உண்ண”

“மருந்து நான் என்பது உனக்குத் தெரியாது”

“சாகா மருந்து என்பதால்தான் உன்னை நேசிக்கி றேன். புத்திசாலி என்று நினைக்கிறேன்; புரிந்து கொள் வாய் என்று யாசிக்கிறேன்”

“கண்டதும் காதலா”

“ஊறுகாயைக் கண்டால் நா ஊறுவதை யாரால் தடுக்க முடியும். மாரன் என்னைத் துளைக்கிறான்; அதனால்தான் உன்னை வளைக்கிறேன்”

“வெட்கம், நாணம், அச்சம் இவற்றை விட்டுப் பேசுவது ஏன்?” .

“அதுதான் காதலின் வெற்றி; விளக்க நேரம் இல்லை: புறப்படு என்னொடு; தப்பித்துச் சென்று விடலாம்; இல்லையேல் என் தமையன் இடிம்பனின் இடிபாடுக்கு நீ இரையாக வேண்டியதுதான்”

“இந்த அச்சுறுத்தல் என்னை ஒன்றும் அசைக்காது; முத லில் அவன் வரட்டும். அவனைப் பார்த்துப் பேசுகிறேன்”

“அதுவும் முறைதான்; என்றாலும் அவன் அனுமதி தேவை இல்லை; மணம் என் விருப்பம்!”

“இல்லை அவனைப் பிணமாக்குவதற்கு”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது சிவ பூசை யில் கரடி புகுந்ததைப் போல இடிம்பன் வந்து சேர்ந்தான்.

“யாரடா நீ? என் தங்கையிடம் உனக்கென்ன பேச்சு?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/60&oldid=1048302" இலிருந்து மீள்விக்கப்பட்டது