பக்கம்:மாபாரதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மாபாரதம்


“பெண் என்பதால் பேசுகிறேன்; வீரனாக இருந்தால் விளையாடி இருப்பேன்” என்றான்.

“காதலா அரக்கியோடு சல்லாபமா? உன்னை வானுலகம் அனுப்புகிறேன்! அங்கே அரமகள் உன்னை அர வணைப்பாள். அழகியர் அங்கே அநேகர் உளர்; உன்னைக் கட்டி அணைப்பர்!”

இருவரும் நெருங்கிப் போர் செய்தனர். இடிகள் இடிப்பது போல் பேரொலி எழுந்தது; தம்பியரும் தருமனும் ஒதுங்கி நின்றனர். குந்தி சற்றுத் தொலைவில் நின்றாள்; பாசத்துக்கும் காதலுக்கும் போராட்டம் நடந்தது. தமையனா காதலிக்கும் புதியவனா யாரை இழப்பது என்று தெரியாமல் இடிம்பி அலைமோதினாள்.

காதல் வென்றுவிட்டது; சாதல் இடிம்பனைத் தழுவியது.

தம்பியரும் தருமனும் “இவன் எதிரிகளைத் தாக்கும் வலிமையும் வீரமும் ஆற்றலும் உடையவன்” என்று அறிந்து மகிழ்வுகொண்டனர்; இடிம்பி அவலமும் உவகையும் ஆகிய இரண்டு உணர்வுகளில் அலைமோதினாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. இடிம்பியின் வாழ்க் கையும் புலர்ந்தது.

துணிந்து தன் காதற் குறிப்பை இடிம்பி வீமனிடம் வெளியிட்டாள். தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினாள்.

“அரக்கி நீ; மானுடன் நான்; சூர்ப்பனகை கதை கேட் டிருப்பாய்? அந்தக் கதிதான் உனக்கு நேரும்; விலகி விடு”

நீ என்னோடு விளையாடுகிறாய்; என் அண்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/61&oldid=1048303" இலிருந்து மீள்விக்கப்பட்டது