பக்கம்:மாபாரதம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

6

நருமனையும் அவன் தாயையும் தம்பியரையும் அழைத்து வரவேற்றான்.

இடம் அகன்ற மாளிகைபோல் இருந்த அவ்வீட்டில் இருந்து கொண்டு தினத்துக்கு ஒரு வீடு என முறை வைத்துக்கொண்டு உணவு அருந்தினர். எந்த விதக் குறைவும் இல்லாமல் மன நிறைவோடு அந்த ஊரில் அவர்கள் தங்கி இருந்தனர்.

பார்ப்பனியின் அழுகை

தாம் தங்கி இருந்த வீட்டில் அவ்வீட்டிற்கு உரிய தலைவி சோகமாகக் கண்ணிர் உகுத்துக் கொண்டிருந்தாள். குந்தியின் நெருங்கிய தோழியாகப் பழகியவள்; அழகி; விரதங்களை மேற் கொண்டு மங்கலகரமான வாழ்க்கையை உடையவள்; எந்தக் குறைவும் இல்லாத குடும்பம் அது; ஒரு மகன்; ஒரு மகள்; அன்புக்கினிய கணவன்; மாளாத செல்வ வாழ்க்கை இவ்வளவு இருந்தும் அவள் அழுதது குந்தியின் உள்னத்தை உருக்கியது; அவளிடம் பரிவு காட்டினாள்.

“தேம்பித் தேம்பி அழுகிறாயே. காரணம் என்ன? இயம்புக” என்று வினவினாள்.

“இந்த நகரை அடுத்துப் பேய் உறையும் பெருங்காடு இருக்கிறது. அங்கே ஒரு அரக்கன் இருக்கிறான்; பகன் என்பது அவன் பெயர். பகாசூரன் என்றும் கூறுவர். அவன் மிகவும் பொல்லாதவன். ஊருக்குள் புகுந்து, ஆடு மாடுகளையும், மனித உயிர்களையும் கொன்று தின்று வந்தான். தேவைக்குமேல் கொலை செய்து அழிவு செய்து வந்தான். ஊர்ப் பெரியவர்கள் கூடி அவனிடம் ஒர் ஒப்பந் தம் செய்து கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/64&oldid=1048307" இலிருந்து மீள்விக்கப்பட்டது