பக்கம்:மாபாரதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

63

தில் பிறந்துவிட்டான் என்று பார்க்கிறாயா? நம்மவர்களில் பலர் இப்பொழுது எல்லாம் சிப்பாய்களாக எத்தனையோ பேர் அத்தினாபுரியில் வேலை செய்கிறார்கள். இவன் வேதம் மட்டும் அல்ல; மல்யுத்தமும் கற்றிருக்கிறான்.இவனை வெறும் சாப்பாட்டு ராமன் என்று நினைக்கிறாயா? அதுதான் இல்லை; சொன்னால் போதும்; போய் அவனை உண்டு இல்லை என்று பார்த்து விட்டு வந்து விடுவான். ‘இடிம்பன்’ என்ற ஒரு அசுரன் இருந்தானே தெரியுமா? அவன் இவன் கைக்கு இடியாப்பம் ஆகிவிட்டான்; அவனுக்கு ஆசை, பாண்டவர் படையில் சேர்ந்து வீமனைப் போல் சண்டை போட வேண்டும் என்று; என்ன செய்வது வேத கீதத்தில் அவன் நாதம் அடங்கிக் கிடக்கிறது. ஏதம் வராமல் அவன் உங்களைக் காப்பான்”.

“நீ கவலைப்படாதே; அவனை அனுப்பி வைக்கிறேன்; நீ போய் சாப்பாடு தயார் செய்; வண்டிக்கு ஏற்பாடு செய்; அவன் வந்து விடுவான்” என்று கூறி ஆறுதல் தந்தாள்.

அந்த வீட்டு அம்மையாருக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. நால்வரில் யாரை இழப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவளுக்கு விடுதலை கிடைத்தது. இவன் அவனைக் கொள்ளாவிட்டாலும் இன்றைய உணவுக்கு இவன் இரையாவான்; அந்தக் குடும்பத்தினர் தப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் மனச்சாட்சி உறுத்தியது.

“அதிதியாக வந்தவருக்கு அழிவு சேர்ப்பது தவறு அல்லவா! என்று கேட்டாள்.

“அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதாகும்; அவன் சாக மாட்டான், கெட்டி ஆயுள்; இந்த ஊரைப்பிடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/66&oldid=1048309" இலிருந்து மீள்விக்கப்பட்டது