பக்கம்:மாபாரதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மாபாரதம்

சனியன் ஒழிந்து விடும்; உனக்குச் செய்யும் நன்மை மட்டும் அல்ல; தீயவன் ஒருவனைத் தீர்த்துக்கட்டுவது மனித தர்மம். தருமம் தழைத்து ஒங்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை, பெரியவன் இருக்கிறானே அவனும் அப் படித்தான்; தர்மம் பிசகமாட்டான்; அவன் தம்பி இன் னும் மிகவும் சுறுசுறுப்பு;மற்ற இரண்டு பேரும் பார்த்தால் பசுப்போல் சாதுவாக இருப்பார்கள். ஆனால் பயங்கர மானவர்கள்; அரச குடும்பத்தில் பிறக்க வேண்டியவர்கள்; அதிருஷ்டக்கட்டைகள்” என்று நயமாகப் பேசினாள்.

அழுகை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. எங்கிருந்துதான் சுறுசுறுப்பு வந்ததோ அந்தக் குடும்பத்தில்; அனைவரும் பகனுக்குச் சோறு சமைப்பதில் ஈடுபட்டார்கள். சோறா அது? முத்துக்குவியல் எனச்சோறு வடித்துக் கொட்டப்பட்டது. கயிலை மலையே இதன்முன் வெள்ளிக் குன்றாகக் காட்சி அளித்தது. மொண்டு சொரியும் குழம்பு வகைகளும், கடித்துத் தின்னத்தக்க கறிவகைகளும், பாலும், தயிரும், நெய்யும், பருப்பும் சமைத்து வைக்கப்பட்டன. அவற்றை வண்டியில் ஏற்று முன் பாண்டவர் ஐவரும் ஒரு கை பார்த்து விட்டனர்; வண்டியின் சுமையைக் குறைத்தனர்; வயிறார உண்டனர். பசி யாரத் தின்றனர். இவர்கள் உண்டு மீதியானவற்றை ஒரு வண்டியில் இட்டு நிரப்பினர். எருதுகள் இரண்டினை அவ் வண்டியில் பூட்டினர். குருதி கொட்டிய சோறு எனக்காட்சி தருவதற்குச் செந்நிற மலர்களைத் தூவினர். குருதி போன்ற கலவைச்சாந்து பூசினர்.

பகாசூரன் மரணம்

வண்டி வரும் போதே சூரனின் பசியை அது கிண்டியது, வீமன் சிங்கம் போல் சீறிய நிலையில் அவ்வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/67&oldid=1048310" இலிருந்து மீள்விக்கப்பட்டது