பக்கம்:மாபாரதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

65

முன் அமர்ந்து அதை ஒட்டி வந்தான். ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் வண்டி நிறுத்தப்பட்டது. காத்திருந் தவன் வண்டியில் இருந்த வகையான ஆளைக்கண்டு உவகை கொண்டான். நொய்ந்து கிடந்த அந்தண மைந்தர்களை உண்டவன் கொழு கொழுத்த நரனைக் கண்டதும் நாவில் நீர் ஊறக் காத்து இருந்தான்.

வேண்டுமென்றே அவன் பார்த்து வேகும்படி முதுகுப் புறம் பகன் காண அவ்வுணவினை அள்ளித் தின்றான். அவன் உள்ளம் கொதித்தது.

“ஏன் அடா உனக்கு என்ன திமிர்? கொண்டு வந்த சோற்றை நீயே சுவை பார்க்கிறாயே? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சொல்லிக் கொண்டு முதுகுப் புறம் வந்து இரண்டு குத்துகள் விட்டான். சோறு உள்ளே சென்றது. அப்பாடா நன்றி; இன்னும் இரண்டு குத்து விடு’ என்றான்.

“புலிக்கு இட்ட உணவைப் பூனை நீ உண்பதா?” என்று கூச்சவிட்டான்.

“உண்பது எங்கே போகப்போகிறது! அதுவும் உன் வயிற்றில் தானே பின் சேரப்போகிறது” என்று சொல்லிக் கொண்டு வீமன் பகனை நெருங்கினான்.

அருகில் வந்ததும் நெருக்கு நேர் வீமன் சந்தித்து, “பேசுவது போதும்; மோதுவது செய்வோம்” என்றான்.

“இழுத்துப்பிடித்து வேட்டியை இறுக்கக் கட்டிக் கொள். அழுத்திப் பிடித்து உன்னை உடம்பு பிடித்து விடுகிறேன்” என்றான் வீமன் தொடர்ந்து.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/68&oldid=1048312" இலிருந்து மீள்விக்கப்பட்டது