பக்கம்:மாபாரதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மாபாரதம்

அந்தணர்கள் ஆரவாரித்து மகிழ்ச்சி கொண்டாடினர். தேவர்கள் வாழ்த்தினர்.

தாம் தொடுவதற்கு இயலாத வில்லினை அவன் எடுத்து வளைத்து இலக்கினை வீழ்த்தினான் என்று அறிந்ததும் தரணிபர் தம்முகம் கருகி விட்டது; நீலமலை போல் நின்ற அந்தணனை அவன்தான் அருச்சுனன் என்று பாஞ்சாலர் கன்னி கண்டு கொண்டாள். தன் தாமரைச செங்கண்ணால் பாங்காகப் பரிந்து நோக்கித் தேன் பொதிந்த அழகிய செங்கழுநீர்ப்பூ மாலையை அருவி போல் அவன் தோள்களில் சேர்த்தாள். அதன்பின் பாஞ்சாலியை அழைத்துக் கொண்டு தம் துணைவர் இருபுறமும் வர அவையில் இருந்த மன்னர் களை மதிக்காமல் அருச்சுனன் வெளியேறினான்.

“எங்கிருந்தோ வந்த பார்ப்பனன் பாஞ்சாலன் பயந்த பாவையைத் தட்டிக் கொண்டு போகிறான்; அரசர்கள் என்று சொல்லிக் கொண்டு தலைகளில் மகுடம் தாங்கி நிலத்துக்குச் சுமையாக இருக்கிறீர்; மானம், வெட்கம், சூடு, சுரணை இல்லாமல் மாடுபோல் நிற்கிறீர். முதலில் அவனைத் தடுத்து நிறுத்துங்கள்” என்று துரியன் முழக் கம் செய்தான்.

முத்துப் போன்ற நகை. அழகி திரெளபதியை மூத்தவன் பின் நிறுத்திவிட்டு வீமனும் வில் விசயனும் அரசர் கூட்டத்தை எதிர்த்துப் போராடினர்; அந்தணர் கூட்டமும் தாம் கைகளில் வைத்திருந்த தடிகளைக் கொண்டே அரசர்களை ஓட ஓட விரட்டினர். இந்த அந்தணர்கள் துணிந்து தாக்குதலைக் கண்டு அருச்சுனன் சிரித்து விட்டு “நீங்கள் விலகுங்கள்” என்று சொல்லி அவர்களை அகற்றினான். “என் முன் எமன் வந்தாலும் அவனைத் தடுப்பேன்” என்று முழக்கம் செய்தான். அவனை அந்தணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/81&oldid=1048320" இலிருந்து மீள்விக்கப்பட்டது