பக்கம்:மாபாரதம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

85

தோற்றது போல யானை போல வந்த கன்னன் நகுலனின் தாக்குதலுக்கு ஆற்றாது புறம் காட்டினான்; சகாதேவன் சகுனி தேரோடு திரும்பி ஒடும்படி தாக்கினான். தீ முன் வெண்ணெய் உருகுதல் போல வீமனைக் கண்டு துரியனும் துச்சாதனனும் மற்றும் உள்ள தம்பியரும் உறுதி குலைந்து ஒடினர். கன்னனும், துரியனும், துச்சாதனனும், சகுனியும் அரக்கு மாளிகையில் அழிக்க அனுப்பிய புரோசனின் கவனக்குறைவாலேயே பாண்டவர் பிழைத்து விட்டனர் என்று அவனை நினைத்து நொந்து கொண்டனர். பாண்டவர் வேள்வித் திருமகளை மணந்ததோடு வெற்றித் திருமகளையும் அடைந்த பெருமை பெற்றனர்; மாமன் துருபதனோடும் கண்ணனோடும் தங்கி அந்த மாநகரில் மாண்புடன் வைகினர்.

போர்மேற் சென்ற துரியோதனாதியர் போரில் பின் வாங்கியதை அறிந்து திருதராட்டிரன் புதுவகையில் சிந்தித்துத் தம்பியின் பாகத்தைத் தருமனுக்கு ஈவதற்கு அமைச்சரோடு கலந்து யோசித்தான்.

போர் செய்வதனால் எந்த நன்மையும் வரப்போவ தில்லை; அவர்களுக்கு உரிய ஆட்சியைத் தந்து விடுவதே அவர்களைத் துரியனுக்கு வேண்டியவர்கள் ஆக்கமுடியும். அதனால் தன் மகனுக்கு ஆக்கமே விளையும் என்பதால் இம்முடிவுக்கு வந்தான். வீடுமனும் விதுரனும் அதுவே தக்கது என்று உரைத்தனர். அதனால் அவர்களைத் துது அனுப்பி வரவழைத்து அத்தினாபுரியில் நிறுத்திக் கொண்டனர்.

இந்திரப் பிரத்த ஆட்சி

அத்தினாபுரியில் அய்யிரு பதின்மர் ஐவர் என்று பேத மில்லாமல் இரண்டறக்கலந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/88&oldid=1035658" இலிருந்து மீள்விக்கப்பட்டது