பக்கம்:மாபாரதம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

91

அந்தணத் துறவுக் கோலத்தை நீக்கிவிட்டுக் காமனும் விழையும் கண்கவர் வடிவம் கொண்டு அழகனாக அவள் முன் நின்றான். கண்கள் பேசிக் காதலை வெளிப்படுத்தின.

வந்தவன் அருச்சுனன் என்பதை அரசன் அறிந்து அவளை அவனுக்கு மணம் செய்து தந்தான். தனக்கு மகள் ஒருத்தியே இருந்ததால் அவளுக்குப் பிறக்கும் மகனைத் தன்னிடம் விட்டுச் செல்லும்படி கேட்டுக் கொண்டான். பண்பாட்டின் பிறப்பிடம் தமிழகம் ஆகையால் தமிழ் இனிக்கும் பாண்டிய நாட்டை அவன் விரும்பினான். வட நாட்டில் பிறந்த விசயன் தமிழ் மண்ணில் பெண்ணைத் தேர்ந்தெடுத்தது தமிழ் மண்ணுக்குப் பெருமையைச் சேர்த்தது.

சுபத்திரையின் மணம்

பப்புருவாகனன் என்ற பெயருடைய மைந்தனைப் பாண்டிய நாட்டில் விட்டுச் சென்று சித்திராங்கதையிடம் விடை பெற்றுக் கொண்டு சேது நோக்கிச் சென்றான். கன்னியாகுமரி முனைக்கடலில் குளித்துவிட்டு வடக்கே திரும்பினான். உறவுக்காக ஒருத்தியைத் தேடித் துவாரகை சென்றான். கண்ணனின் தங்கை சுபத்திரை தாவணி அணியும் முன் அறிந்து பழகியவன். அத்தை மகள் என்று அவளிடம் அவன் தனி அன்பு காட்டியவன். அவள் நினைவு வரவே அவன் பயணம் துவாரகை நோக்கித் திரும்பியது. அவள் தாவணிக் கனவுகளை நனவு படுத்த வாய்ப்பு நல்கினான்.

பண்பாடிப் பாட் டிசைக்க அவனுக்குத் துறவுக்கோலம் உதவியது; ஆலமர நிழலில் யோக நிலையில் அமர்ந்து மாபெரும் தவசி போல் நாடகம் நடத்தினான் ஊருக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/94&oldid=1036094" இலிருந்து மீள்விக்கப்பட்டது