பக்கம்:மாபாரதம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

93

எங்கெங்கே தங்கினர்? நீங்கள் உறையும் மாநகர் யாது” என்று வினவினாள்.

தவசியாகிய அருச்சுனனும் தான் தங்கி இருப்பது இந்திரப்பிரத்தம் என்று கூறினான். அவன் அவ்வாறு கூறியதும் அருச்சுனனை விடுத்து ஏனைய நால்வரின் நலம் குறித்து விசாரித்தாள்.

“மின்னல் போன்ற அழகியே! விசயனைப் பற்றிக் கேட்க மறந்தது ஏன்?” என்று கேட்டான்.

அதற்கு அவள் பதில் தரவில்லை; அவள் தோழி பதில் சொன்னாள்.

“மாமன் மகன் பேரைச் சொல்ல அவள் வெட்கப்படு கிறாள். அவனைத்தான் அவள் மணக்கப் போகிறாள்” என்றாள்.

“தீர்த்த நீர் ஆடுவதற்காகப் பார்த்திபன் ஊர்கள் சுற்றித் திரிகிறான் என்று கேள்விப்பட்டோம்; அவன் பேர் பற்றி ஏதேனும் கேள்விப்பட்டது உண்டா? அவன் எங்கே இருக்கிறான். சொல்ல முடியுமா?” என்று தொடர்ந்து அத்தோழிப் பெண் கேட்டாள்.

“ஊரைப் பார்க்கச் சென்றவன் இப்பொழுது உம் தோழியின் பேர்ைச் சொல்லிக் கொண்டு இங்குத் தங்கி இருக்கிறான்” என்றான்.

துறவி உரைத்த உரையைக் கேட்டு யதுகுலப்பெண் ஆகிய சுபத்திரை நெற்றி வியர்த்தாள். இதழ் துடித்தது; மேனி புள கித்தது; அரிவை அவள் அவனை அடையும் ஆவலைக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/96&oldid=1036098" இலிருந்து மீள்விக்கப்பட்டது