பக்கம்:மாயக் கள்ளன்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


99 இப்படியாக அவன் தந்திரத்தாலேயே காலந் தள்ளி வந்தான். அவனுடைய தந்திரத்தை அறிந்த சிலபேர் அவனேக் கிழக் குள்ளநரி என்று கூப்பிட்டார்கள். கிழக் குள்ளநரி என்ற பெயர் மெதுவாக வெளியில் பரவிற்று. எல்லோருக்கும் அந்தப் பெயர் தெரிந்துவிட்டது. அப்படித் தெரிந்ததும் கிழவனே யாரும் நம்பவில்லை. அவனேப் பக்கத்தில் சேர்ப்பதும் இல்லை. கிழவனுக்கு அந்த ஊரில் சோறு கிடைப்பது சிரமமாயிற்று. கிழவன் அந்த ஊரை விட்டு வேறு எங்காவது போகத் தீர்மானித்தான். புதிய ஊரில் அவனுடைய தந்திரம் பலிக்கு மென்று நினத்தான். அத்ல்ை அவன்,ஒரு நாள் அதிகாலேயில் எழுந்து, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டான். நெடுந்துாரம் சென்ற பிறகு, வழியிலே ஓர் ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றைக் கடக்க ஓடத்தில் எறிச் செல்ல வேண்டும் ஓடக்காரனுக்குப் பணம் கொடுக்க வேண்டும். ஓடக்காரனுக்குப் பணம் கொடுக்கக் கிழவனுக்கு மனம் வரவில்லை. அவன் ஓடக்காரனே ஏமாற்றிவிட்டுத் தந்திரமாக அக்கரை போக நினத்தான். அதற்காக ஓடக்காரன் தன் வீட்டிற்கு உணவருந்தப் போகும் வரையில் காத்திருந்தான். ஓடக்காரன் வீட்டுக்குச் சென்றதும் கிழவன் மெதுவாக வந்து, ஆற்ருேரத்தில் இருந்த ஒடத்தில் எறிக்கொண்டான். அந்த ஓடத்தின் மத்தியில் ஒரு சிறிய குடிசை போல் மூங்கிலிலே கட்டியிருந்தது. அதற்குள் கிழவன் புகுந்து யாருக்கும் தெரியாமல் உட்கார்ந்துகொண்டான். ஆற்றின் கரையில் ஒடத்திற்குப் பக்கமாக ஒரு குரங்கு வந்து நின்றது; பிறகு ஆற்றில் தண்ணீர் குடிக்கத் தொடங்கிற்று. கிழவன் அந்தக் குரங்கைக் கூப்பிட்டான். "குரங்காரே, குரங்காரே, இந்த ஓடத்தைக் கொஞ்சம் தள்ளிவிடு’ என்று அவன் சொன்னன்.

  • நீ யார்? நீ எங்கே போகிருய்?’ என்று குரங்கு கேட்டது.