பக்கம்:மாயக் கள்ளன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iOO "நான்தான் கிழக் குள்ளநரி. மாமியார் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போகிறேன்’ என்ருன் கிழவன். "திரும்பி வரும்போது எனக்கென்ன கொண்டுவருவாய்? என்று மறுபடியும் கேட்டது குரங்கு. ‘உளுந்து வடை ஒரு கூடை, ஒமப்பொடி ஒரு கூடை: தயிர் வடையும் ஒரு கூடை, சர்க்கரைப் பொங்கலும் ஒரு கூடை” என்று ஆசைகாட்டிச் சொன்னன் கிழவன். சரி. போப் வா’ என்று சொல்லிவிட்டுக் குரங்கு, ஒடத்தைத் தன் கைகளால் தள்ளிவிட்டது. பலகாரமெல்லாம் கிடைக்குமென்று அதற்கு ஆசை உண்டாயிற்று. ஓடம் ஆற்றிலே கொஞ்ச தூரம் சென்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அந்தப் பாறையின்மேல் உட்கார்ந்து ஒரு கொக்கு மீன் பிடித்துத் தின்றுகொண்டிருந்தது. கிழவன் கொக்கை உதவிக்கு அழைத்தான். கொக்காரே, கொக்காரே, இந்த ஒடத்தைக் கொஞ்சம் தள்ளிவிடு.”

  • நீ யார்? நீ எங்கே போகிருப்?

"நான்தான் கிழக் குள்ளநரி, மாமியார் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போகிறேன்.” 'எனக்கென்ன கொண்டுவருவாய்? 'உளுந்து வடை ஒரு கூடை, ஒமப்பொடி ஒரு கூடை: தயிர் வடையும் ஒரு கூடை, சர்க்கரைப் பொங்கலும் ஒரு கூடை.” கொக்குக்கு நாக்கில் நீர் ஊறிற்று. *சரி, போய் வா’ என்று சொல்லிவிட்டு, ஒடத்தைத் தன் மூக்கால் தள்ளிவிட்டது. ஒடம் நகர்ந்து நடு ஆற்றிற்கு வந்துவிட்டது. அங்கே மற்ருெரு பாறை இருந்தது. அதன்மேல் ஒரு முதலே படுத்து வெயில் காய்ந்துகொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/103&oldid=867585" இலிருந்து மீள்விக்கப்பட்டது