பக்கம்:மாயக் கள்ளன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சித்துப் பெருமான் மறுபடியும் மலேயடிவாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஆத்மரங்கன் வெகுநேரம் கழித்து விழித்துப் பார்த்தான். எப்படியாவது மலேயுச்சிக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு அதிகமாயிற்று. கடவுளிடத்திலே மிகுந்த பக்தியுடைய ஒரு பக்தசை ருஉவமெடுத்துக்கொண்டு அவன் புறப்பட்டான். மலைப்படிகளின்மீது காலெடுத்து வைக்கத் தொடங்கினன். மாயக்கள்ளன் கதை சொல்லு வதற்கு உடனே வந்து சேர்ந்தான். கடவுள் அடியாரிடத்தில் அவனுக்குக் கொஞ்சம் பயம் உண்டு. இருந்தாலும் அவன் தளர்ந்துவிடவில்லை. தன்னுடைய கதையை வழக்கம் போல ஆரம்பித்தான்: 'பெருமாள் திருநகரம் என்று ஒரு சிறிய பட்டணம் இருந்தது. அங்கே ஒரு பக்தர் வசித்து வந்தார். அவர் தினந்தோறும் காலேயிலும் மாலேயிலும் பெருமாள் கோயிலுக் குச் சென்று பிரார்த்தண் செய்வார். பெருமாள் பேரில் பாடல்கள் பாடுவார். பெருமாளுடைய தரிசனம் கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்வார். இப்படிப் பல ஆண்டுகளாகப் பெருமாளேத் தொழுது கொண்டு அவர் அந்தப் பட்டணத்திலேயே வாழ்ந்து வந்தார். பிறகு, அவர் யாத்திரை புறப்பட்டார். பெருமாளுடைய கோயில்களேயெல்லாம் காணவேண்டுமென்று அவருக்கு ஆசை உண்டாயிற்று. கால் நடையாகவே அவர் பிரயாணம் செய்தார். ஒவ்வொரு கோயிலிலும் மூன்று நாள்கள் தங்கியிருந்து பெருமாளேப் பாடினர். தம் கையிலுள்ள தாளத்தைத் தட்டிக்கொண்டு அவர் பக்தியோடு பாடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/106&oldid=867591" இலிருந்து மீள்விக்கப்பட்டது