பக்கம்:மாயக் கள்ளன்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


105 தலையிலே இருந்த மூட்டையை எடுத்து அவிழ்த்தார். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம் எல்லாம் எடுத்துப் பெருமாள் பக்தரின் முன்னல் வைத்தார். பக்தரும் அவற்றை ஆவலோடு சாப்பிடத் தொடங்கினர். அந்த உணவு அமுதம் போல் இருந்தது. அவர் நன்ருகச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தார். உணவு கொடுத்த வருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினர். ஆல்ை, அவரைக் காணவேயில்லே. அவர் கானகத்தில் மறைந்து போய் விட்டார். عمیم به تیم دسته ای است که برای همیشه பெருமாள் பக்தர் தம்முடைய எண்ணம் பலித்ததை அறிந்து சந்தோஷப்பட்டுக்கொண்டே அங்கிருந்து கிளம் பினர். அந்தக் கானகத்தைக் கடந்து வெளியில் வரும் போது அங்கோர் இடத்தில் ஒரு பெரிய மாமரம் இருந் தது. அதில் நல்ல மாம்பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. பெருமாள் பக்தருக்கு மாம்பழத்தின்மேல் ஆசை ஏற் பட்டது. அதஞல், இந்த மாம்பழங்களிலே மூன்று பழங்கள் எனக்கும் கிடைக்க வேண்டும்’ என்று வாய் விட்டுச் சொன்னர். அப்படிச் சொல்லும்போதே மூன்று மாம்பழங்கள் கீழே விழுந்தன. பக்தர் அவற்றை எடுத்து