பக்கம்:மாயக் கள்ளன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 பலித்ததை எண்ணி எண்ணி அவர் குதூகலமடைந்தார். வழியிலே நடந்த அந்த மூன்று சம்பவங்களைப்பற்றியும் திருப்பித் திருப்பி நினத்துப் பார்த்தார். கானகத்தின் மத்தியிலே பசியால் வாடும்போது அவர் நல்ல உணவு வேண்டும் என்று நினேத்தவுடன் யாரோ ஒருவர் அவருக்குச் சுவையான உணவு கொண்டுவந்து கொடுத்தார். பிறகு, மாமரத்தில் தொங்கிய மூன்று பழங்கள் தமக்குக் கிடைக்க வேண்டும் என்று சொன்னவுடனே அந்தப் பழங்கள் மரத்தி லிருந்து கீழே அவருக்கு முன்னல் விழுந்தன. இப்பொழுது அந்தப் பையன் சுகப்பட்டு எழுந்து ஓடவேண்டுமென்று சொன்னவுடனே, கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டு தரையில் கிடந்த பையன் சிரித்துக்கொண்டே எழுந்து ஓடிவிட்டான். இவற்றையெல்லாம் நினேக்க நினேக்கப் பெருமாள் பக்தருக்குக் கர்வம் ஓங்கி வளர்ந்தது. தமது சக்தியைப்பற்றி எண்ணி எண்ணிப் பெருமை கொண்டார். பழைய காலத்தி லிருந்த பெரிய சித்தர்கள் சொன்னவையெல்லாம் உடனே பலித்தனவல்லவா? அவர்களைப்போலவே தாமும் ஒரு சித்தராக மாறிவிட்டதாக அவர் எண்ணிக்கொண்டார். அந்த எண்ணம் வரவர அவருக்குப் பெருமாளப்பற்றிய நினேப்புக் குறைய லாயிற்று. தம்மால் எது வேண்டுமானுலும் செய்ய முடியும் என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தார். தம்முடைய பெயரை மாம்பழச் சித்தர் என்று வைத்துக்கொண்டார். மாம்பழம் விழ வேண்டுமென்று அவர் சொன்னதும் மூன்று மாம்பழங்கள் தமக்கு முன்னுல் விழுந்த அற்புதத்தைப்பற்றி அவர் அந்த ஊரிலே எல்லோரிடமும் சொல்லத் தொடங்கினர். அந்த ஊரிலே குப்பன் என்று ஒருவன் இருந்தான். அவன் முழுச் சோம்பேறி. ஒரு வேலேயும் செய்யமாட்டான். அவனுடைய தாயார் கூலிவேல் செய்து பணம் சம்பாதிப்பாள். அதல்ை கிடைக்கும், பணத்தைக்கொண்டு அவன் வயிற்றை நிறைத்து வந்தான். அவன் சோம்பேறி மட்டுமல்ல: குறும் புக்காரன் மற்றவர்களுக்கு எதாவது தொந்தரவு கொடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/110&oldid=867600" இலிருந்து மீள்விக்கப்பட்டது