பக்கம்:மாயக் கள்ளன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 தேங்காய் பழம் வருவதற்கு நான் ஒரு தந்திரம் செய்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்' என்று உற்சாகத்தோடு அவன் சொன்னான். “நீ என்ன தந்திரம் செய்ய நினைக்கிறாய்?' என்று கேட்டார் குருநாதர், ‘நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பெரிய திரையைப் போட்டுவிடுகிறேன். அந்தத் திரைக்குப் பின்னால் மறைந்து நான் உட்கார்ந்துகொள்கிறேன். பக்கத்தில் பல தட்டுகளில் தேங்காய் பழமும் வைத்துக்கொள்கிறேன். நீங்கள் தேங்காய் பழமே வா' என்று சொல்லும் போதெல்லாம் ஒரு தட்டை வெளியில் தள்ளுகிறேன்' என்றான் கொடுக்குக் குப்பன்.

'வருகின்றவர்களை இப்படி ஏமாற்றலாமா?' என்று தயக்கத்தோடு கேட்டார் மாம்பழச்சித்தர். “எல்லோரும் உங்களப்பற்றிப் பெருமையாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது நீங்கள் தான் சொல்லுகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/112&oldid=1277028" இலிருந்து மீள்விக்கப்பட்டது