பக்கம்:மாயக் கள்ளன்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f 10 படி செய்யாவிட்டால் உங்களே யாரும் மதிக்கமாட்டார்கள்’ என்று எடுத்துக் காட்டினன் கொடுக்குக் குப்பன். அதல்ை மாம்பழச் சித்தரும் அவனுடைய யோசனேயை எற்றுக்கொண்டார். கொடுக்குக் குப்பன் தந்திரம் நன்ருகப் பலித்தது. தேங்காய் பழமே வா’ என்று மாம்பழச் சித்தர் கூறிக் கையை நீட்டும்பொழுதெல்லாம் திரைக்குப் பின்னல் இருந்து தேங்காய் பழத்தட்டமொன்று வெளியே வந்தது. அதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். மாம்பழச் சித்தரின் கால்களில் பய பக்தியோடு விழுந்து வணங்கினர்கள். ஏராளமாகப் பொன்னும் பொருளும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். தூரத்திலுள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் ஆயிரக்கணக்காக வர ஆரம்பித்தார்கள். பணம் நிறையக் குவிகின்றதைக் கண்டு கொடுக்குக் குப்பன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பெரிய ஆசிரமம் ஒன்றைக் கட்டினன். அதில் இருந்துகொண்டு மிகவும் ஆடம்பரமாக வாழத்தொடங்கின்ை. மாம்பழச் சித்தரும் பெருமாளே மறந்துவிட்டு ஆடம்பரத்திலே மூழ்கினர். இவ்வாறு கொஞ்ச காலம் கழிந்தது. கொடுக்குக் குப்பனுக்குக் குருநாதரின் பீடத்தில் தானே அமரவேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அதல்ை அவன் மாம்பழச் சித்தரை நோக்கி, ‘சுவாமி, இந்தத் தேங்காய் பழம் வரவழைக்கிற அற்புதத்தை நான் சில நாள்களுக்குச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். வருகின்ற மக்களுக்கு முன்னல் உட்கார்ந்துகொண்டு, தேய்காய் பழமே வா’ என்று நான் சொல்லுகிறேன். நீங்கள் திரை மறைவிலே இருந்துகொண்டு தட்டத்தை அனுப்புங்கள்’ என்று கேட்டுக்கொண்டான். மாம்பழச் சித்தர் முதலில் இதற்குச் சம்மதிக்கவில்லை. ஆல்ை, கொடுக்குக் குப்பன் அவரை விடவில்லே. நீங்கள் சம்மதிக்காவிட்டால் நான் இந்த அற்புதத்தின் ரகசியத்தை வெளியில் சொல்லிவிடுவேன்’ என்று பயமுறுத்தின்ை. வேறு