பக்கம்:மாயக் கள்ளன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13, மாயக்குரங்கு

மலையடிவாரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஆத்மரங்கன் திடீரென்று விழித்தெழுந்தான், மலையுச்சியை அடைய வேண்டுமென்ற ஆசை முன்னைவிட அதிகமாக உண்டாயிற்று. மலையுச்சிக்குச் சென்று, தாய்தந்தையரை எப்படியும் காணவேண்டும் என்று அவன் உறுதி கொண்டான். இத்தடவை அவன் ஒரு சந்நியாசியாக உருவமெடுத்தான். காவி உடை அவன் உடம்பை அலங்கரித்தது. அவன்

உறுதியோடு மலைப்படியில் காலெடுத்து வைத்தான். வழக்கம் போலக் கதை சொல்லுவதற்கு மாபக்கள்ளன் வந்து சேர்ந்தான். சந்நியாசி என்ருலே மாயக்கள்ளனுக்கு மிகுந்த பயம். உண்மையான சந்நியாசியிடத்திலே தன் விருப்பம் போல் நடக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அவன் சந்நியாசிகளையும் சுலபமாக விட்டுவிடமாட்டான். தந்திரமாக அவர்களையும் ஆட்டி வைப்பான். அவர்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/117&oldid=1277029" இலிருந்து மீள்விக்கப்பட்டது