பக்கம்:மாயக் கள்ளன்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 அடைந்தே தீரவேண்டும் என்று மறுபடியும், மறுபடியும் உறுதி செய்துகொண்டான். இவ்வாறு அவன் உறுதி செய்துகொள்வதைக் கண்டு மாயக்கள்ளன் திகைத்துப் போனன். அவன் தன்னுடைய கதையின் போக்கை அடிக்கடி மாற்றினன். ஆனால், ஆத்ம ரங்கன் கொஞ்சங்கூடச் சோர்வடையாமல் இருந்தான். நன்ருக விழித்துக்கொண்டே யிருந்தான். அதனல் மாயக்கள்ளன் தன்னுடைய தந்திரங்களையே மாற்ற வேண்டியதாயிற்று. அவனுடைய மாயவலைகள் எல்லாவற்றையும் ஆத்மரங்கனுக்கு முன்னல் விரித்து வைக்கத் தொடங்கின்ை. முதலில் கொஞ்ச நேரம் கதை சொல்லிவிட்டு, அவன் ஆத்மரங்கனேக் கடைக்கண்ணுல் பார்த்தான். மலையில் பாதி உயரம் எறியாகிவிட்டது. ஆனல், ஆத்மரங்கன் களேப்பில்லாமல் சுறுசுறுப்போடு மலேயின் மேலே எறிக்கொண்டிருந்தான். அவன் கண்களிலே தூக்கத்திற்கான அறிகுறிகளே தென் படவில்லை. அதனல் மாயக்கள்ளன் புதிய சூழ்ச்சி ஒன்றைச் செய்ய ஆரம்பித்தான். உடனே ஆத்மரங்கனுக்கு முன்னல் மலேப்படிகளில் பல தங்கத் தட்டுகள் தோன்றின. ஒவ்வொரு தட்டும் மிக அழகாக இருந்தது. ஒரு தட்டிலே நிறைய ஜிலேபி இருந்தது. மற்ருெரு தட்டிலே ஹல்வா இருந்தது. இவ்வாறு ஒவ்வொரு தங்கத்தட்டிலும் ஒரு வகையான பட்சணம் இருந்தது. சில தட்டுகளிலே மாம்பழம், பலாப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை முதலிய பழவகைகள் இருந்தன. குடிப்பதற்கு வேண்டிய, இனிய பானங்களே எந்திக்கொண்டு சில பெண்கள் வந்தார்கள். நாக்குக்கு ருசியான பொருள்கள் எராளமாக இருந்தன. மாயக்கள்ளன் அவற்றை ஆத்மரங்கனுக்குச் சுட்டிக் காண்பித்தான், ஆத்ரமங்கா, மலேப்படிகளில் எறி எறி நீ களத்துப் போயிருப்பாய் உனக்குப் பசியாக இருக்கும். இதோ பார், சுவையான பட்சணங்களும் பழங்களும் இருக்கின்றன.