பக்கம்:மாயக் கள்ளன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

117 இவற்றைச் சாப்பிடு. வெள்ளிக் கோப்பைகளிலே தேன் இருக்கின்றது; இனிய சர்பத்துகளெல்லாம் இருக்கின்றன. இவற்றைக் குடித்தால் தாகம் தீர்ந்துபோகும். வா சற்று உட்கார்” என்று நயமாகச் சொன்னான். “ நான் உட்காரவே மாட்டேன். எனது தாய் தந்தையரைப் பார்க்கும் வரையில் நான் எங்கும் தங்க முடியாது. எனக்குப் பசி ஒரு பொருட்டல்ல. பசியைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்” என்று ஆத்மரங்கன் சொல்லிக்கொண்டே மலை பேறினான். அவன் நிற்கவே இல்லை. எது மோக்சியைத் தடியாது

  • சுவையான பட்சணங்கள் இருக்கின்றன. அவற்றை விடலாமா?' என்று மறுபடியும் மாயக்கள்ளன் சொன்னான்,

“நாக்கு ருசியைப் பார்க்க எனக்கு நேரமில்லை. அந்த ருசிக்கு ஆசைப்பட்டால் என்னுடைய நோக்கம் நிறைவேறாது. நான் மலையுச்சியை அடையமுடியாது” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு ஆத்மரங்கன் அடியெடுத்து வைத்தான். மாயக்கள்ளனுடைய தந்திரம் பலிக்காமல் போய்விட்டது. அவன் சொன்னபடி ஆத்மரங்கன் பட்சணங்களைச் சாப்பிட் டிருந்தால் அவன் உடனே தூங்கியிருப்பான். ஏனென்றால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/120&oldid=1277023" இலிருந்து மீள்விக்கப்பட்டது