பக்கம்:மாயக் கள்ளன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அவற்றிலெல்லாம் மாயக்கள்ளன் மயக்க மருந்தைப் போட் டிருந்தான். ஆத்மரங்கன் தனது உறுதியால் தப்பித்துக் கொண்டான். ஆத்மரங்கன் மேலே தொடர்ந்து நடந்தான். மாயக்கள்ளன் கதையைச் சொல்லியாவது அவனேத் தூங்க வைக்க முயற்சி செய்யலாம் என்று கதையைத் தொடர்ந்து சொல்ல ஆரம்பித் தான். ஆத்ரமங்கனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கும்படி கதையை வளைத்து வளைத்துச் சொல்லி அவன் சூழ்ச்சி செய்து பார்த்தான். ஆளுல், அந்தச் சூழ்ச்சியாலெல்லாம் ஆத்மரங்கன் எமாந்துவிடவில்லை. மலேயுச்சியை யடையவேண்டும் என்ற உறுதி அவன் கண்களிலே ஜொலித்தது. அந்தக் கண்கள் அவனுடைய சந்நியாசிக் கோலத்திற்கு ஒரு தனிப்பட்ட அழகையும் உயர்வையும் கொடுத்தன. மலையின் முக்கால்வரசி தூரம் ஏறியாகிவிட்டது. மாயக் கள்ளன் வேறு த ந் தி ரங் க ளே க் கைக்கொள்ளலானன், அவனுடைய மாயையால் திடீரென்று பெரிய புயல் வீசிற்று. பயங்கரமாக இடியிடித்தது. உலகமே நடுங்கும்படியாக இடியின் ஓசை நாலாயக்கமும் எழுந்தது. மழை தாரை தாரையாகப் பெய்தது. "ஆத்மரங்கா, பயங்கரமாகப் புயல் வீசுகிறது. இடி இடிக்கிறது. ஆதலால், இதோ பக்கத்திலுள்ள குகைக்குள்ளே கொஞ்சநேரம் தங்குவோம் வா’ என்று மாயக்கள்ளன் நயமாக அழைத்தான். "மலேயுச்சியை அடையும் வரையில் நான் எங்கும் தங்க மாட்டேன்' என்று உறுதியாகச் சொன்னன் ஆத்மரங்கன். "புயற்காற்றிலே மரங்கள் சடசடவென்று முரிந்து விழுகின்றன. குகைக்குள்ளே போய்த் தங்காவிட்டால் ஒடிந்து விழுகின்ற மரங்கள் நம்மை நொறுக்கிவிடும்’ என்று மாயக் கள்ளன் சொல்லிப் பார்த்தான். 'மரம் விழுந்தாலும் சரி, இந்த மலேயே புரண்டு விழுந்தாலும் சரி, நான் நிற்கமாட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/121&oldid=867623" இலிருந்து மீள்விக்கப்பட்டது