பக்கம்:மாயக் கள்ளன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 மாயக்கள்ளன் பயந்து நடுங்கினான். “ஆத்மரங்கா, நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என்னை ஒன்றும் செய்யாதே” என்று மாயக்கள்ளன் வேண்டிக்கொண்டான். "கதை சொல்வதாக நீ என்னை எத்தனையோ முறை ஏமாற்றியிருக்கிறாய். உன்னை நான் உயிரோடு விடமாட்டேன்.”

“உனக்கு எத்தனையோ கதைகளை அழகழகாகச் சொன்னேனே! என் மீது உனக்கு இரக்கம் இல்லையா? இனிமேல் நான் உன்னை ஏமாற்ற மாட்டேன். நீ என்னை நன்றாகத் தெரிந்து கொண்டாய். என்னை அடக் கியும் விட்டாய். ஆதலால், நீ சொல்லுகிறபடி பெல்லாம் கேட்கிறேன். இந்தக் கோபுர வாயிலைத் தாண்டிப் போக உனக்கு உதவியும் செய்கிறேன். என்னைக் கொல்ல வேண்டாம்” என்று மாயக்கள்ளன் மேலும் கெஞ்சினான். “என் பெற்றோரைக் காண்பதற்கு மலையுச்சிக்கு வராமல் இதுவரை நீ தான் தடுத்திருக்கிறாய். அதற்காக உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டாமா?”” “இதுவரையிலும் நான் தடுத்தது உண்மைதான். இனி நான் அப்படிச் செய்யமாட்டேன். கோபுரவாயிலைத் தாண்டி உள்ளே போக நான் உதவி செய்கிறேன். என்னை ஒன்றும் செய்யாதே” என்று வேண்டிக்கொண்டான் மாயக்கள்ளன். ஆத்மரங்கனுக்கு இரக்கம் உண்டாயிற்று. மாயக்கள்ளனை அடக்கிக் கட்டுக்குள் வைத்திருந்தால் அவன் உதவி செய்வான் என்றும் அவன் தெரிந்து கொண்டான். அதனால் அவன் மாயக்கள்ளனைத் தண்டிக்கவில்லை. 'நான் உன் மேல் ஏறிக்கொள்வேன். நீ எனக்கு வாகன மாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/124&oldid=1277022" இலிருந்து மீள்விக்கப்பட்டது