பக்கம்:மாயக் கள்ளன்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122 ஆகவேண்டும்’ என்ருன் ஆத்மரங்கன். அப்படியே செப் வதாக மாயக்கள்ளன் ஒப்புக்கொண்டான். ஆத்மரங்கன் மாயக்கள்ளன்மேல் எறிக்கொண்டான். மாயக்கள்ளனுடைய வாயினில் கடிவாளத்தைப் போட்டுப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு கோபுரவாயிலைக் கடந்து ஆத்மரங்கன் உள்ளே சென்ருன். அங்கே எங்கும் பிரகாசமாக இருந்தது. நவரத்தினங்க ளெல்லாம் பதித்த ஆசனத்தில் அவனுடைய தாயும் தந்தையும் aడ يخت قاموي تة هي அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று ஆத்மரங்கன் அவர்கள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினன். அந்த இடத்திற்கு வந்ததும் மாயக்கள்ளன் சாம்பலாகிப் போய்விட்டான். ஆத்மரங்கனே அவனுடைய பெற்ருேர்கள் அன்போடு வரவேற்ருர்கள். ஆத்மரங்கன் அவர்களோடு சந்தோஷமாக வாழத் தொடங்கின்ை. அது முதல் அவனுக்குத் துன்பமே கிடையாது. என்றும் அவனுக்கு இன்பமே. அவனுடைய வாழ்வு ஆனந்த வாழ்வாக மாறிற்று.