பக்கம்:மாயக் கள்ளன்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. வனராஜன் பாம்பாக உருவமெடுத்த ஆத்மரங்கன் காட்டுத் தீக்குள்ளே கிடந்து வெந்துகொண்டிருந்தான். தீயிலே அவன் உடம்பெல்லாம் கரிந்தது. நெருப்பின் சூடு தாங்காமல் அவன் துடித்தான். துள்ளித் துள்ளி விழுந்தான். விழுந்த இடமெல்லாம் சுட்டது. ஐயோ ஐயோ என்று கத்தின்ை. அந்தச் சமயத்திலே அவனுக்குப் பெற்ருேரின் நினேப்பு வந்தது. அவர்களிடம் போயிருந்தால் இந்தத் துன்பமே வந்திருக்காது என்று அவனுக்குப் புலப்பட்டது. வீணுகக் காலங் கழித்துவிட்டோமே என்று அவன் வருந்தினன். நெருப்பைத் தாங்கமுடியாமல் அம்மா, அப்பா என்று வாய்விட்டுக் கதறி அழுதான். நல்ல வேளையாகத் திடீரென்று எங்கிருந்தோ மேகம் வந்தது. கொட்டுகொட்டென்று மழை கொட்டிற்று. காட்டுத்தீ யெல்லாம் அணந்து போய்விட்டது. தப்பினேன், பிழைத்தேன் என்று ஆத்மரங்கன் அந்த இடத்தைவிட்டு மலேயடி வாரத்திற்கு ஓட்டம் பிடித்தான். பாம்பைப் போலக் கொடிய உருவம் எடுக்கக் கூடாதென்று அவனுக்குத் தோன்றிற்று. பிறருக்குத் துன்பம் தருகின்ற பிறவியே வேண்டாம். எல்லோருக்கும் இன்பம் தருகின்ற பிறவி எடுப்பதுதான் நல்லது. அப்படிப் பிறவி எடுத்து மலேயுச்சிக்குப் போகவேண்டும். இவ்வாறு அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போது, வானத்திலே ஐந்தாறு வெள்ளேக் கொக்குகள் ஒய்யாரமாகப் பறந்து சென்றன. அவற்றைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு யோசனே தோன்றிற்று. பறவையாக உருவமெடுத்தால் சுலபமாக ஆகாயத்திலே பறந்து போக முடியும். மலேயுச்சியை வெகு சீக்கிரத்தில் அடைந்துவிடலாம். யாருக்கும் துன்பம் கொடுக்க வேண்டிய தில்லே. அதுதான் சரியான வழியென்று ஆத்மரங்கன் நிக்னத்துக் குயிலாக மாறினன்.