பக்கம்:மாயக் கள்ளன்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 | அந்தக் குயில் இனிமையாகப் பாடியது. அதன் குரலேக் கேட்டு எல்லோரும் மகிழ்ச்சிய ைட ந் தார்கள். மாமரத்தின் கிளைகளிலும், ஆலமரத்தின் கிளேகளிலும் அமர்ந்து, அது பாட்டுப் ே பாடிக் கொண்டிருந்தது. மலேச்சாரலிலே பல வகை யான மரங்கள் இருந்தன. அவற்றிலே சுவையான பழங் கள் பழுத்துத் தொங்கின. அந்தக் குயில் அவற்றை யெல்லாம் தின்றுகொண்டு உல்லாசமாகக் கூகூவென்று தனது அழகிய கூவிக்கொண்டிருந்தது. ரலேயெடுத்துக் I குயில் எப்போழுதுமே சோம்பேறிப் பறவை. அது கூடு கட்டாது. சும்மா பாடிக்கொண்டே பறந்து திரியும். பெண் குயில் முட்டையிடுகின்ற தருணத்திலே காக்கையின் கூட்டைத் தேடிக்கொண்டு போகும். திருட்டுத்தனமாக அதில் முட்டை யிட்டுவிட்டு ஓடிவிடும். காக்கைதான் அதன் முட்டைகளே அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். எங்கெங்கோ சென்று, இரை தேடிக் கொண்டு வந்து, குஞ்சுகளுக்குக் கொடுத்து, அவற்றைக் காப்பாற்றும். இந்த வேலேகளேயெல்லாம் குயில் செய்யாது. அது அத்தனே சோம்பேறி. திருட்டுத்தனமாக முட்டையிடும் குயில்களைக் கண்டால் காக்கைக்குப் பிடிக்குமா ? குயில் எங்கு கண்டாலும் அது துரத்திக் கொத்த வரும். ஆத்மரங்கன் இயற்கையாகவே சோம்பேறி. அவன் குயிலாக மாறியதும் அவனுக்கு மேலும் அதிகமாகச் சோம்பல் ஏற்பட்டது. மலேயுச்சிக்குப் போவதை மறந்தேவிட்டான். பழங்களைத் தின்பதும், பாட்டுப் பாடுவதுமாகக் காலங் கழித் தான். இளவேனிற்காலம் வந்தது. பூக்கள் எல்லாம் மலர்ந்து எங்கும் அழகாக இருந்தது. அந்தச் சமயத்திலே அங்கே