பக்கம்:மாயக் கள்ளன்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 முன் ல்ை எலும்பு மலேயாகக் குவியலாயிற்று. தனக்கு நிகர் ஒன்றுமே இல்லேயென்று அது கர்வம் கொண்டது. யாரையும் மதிக்காமல் அது எதேச்சையாகத் திரிந்துகொண்டிருந்தது. உலகமே தனக்குத்தான் சொந்தம் என்றும் அது நினத்தது. சிங்கம் ஒவ்வொரு திசையிலும் சென்று வேட்டையாடி வந்தது. கிழக்கு, தெற்கு, மேற்குத் திசைகளில் போன பிறகு அந்தச் சிங்கம் வடக்குப் பக்கமாகப் போயிற்று: அந்தத் திசையில் ஓரிடத்தில் பசும்புல் உயரமாக வளர்ந்து அடர்த்தியாக இருந்தது. புல்லுக்குள்ளே ஒரு சிங்கம் போனலும் வெளியே தெரியாமல் மறைந்து போகும் அளவுக்கு, உயரமாகப் புல் வளர்ந்திருந்தது. அதற்குள்ளே ஒரு மான் இரண்டு குட்டி போட்டு, அவற்றிற்குப் பால் கொடுத்துக்கொண் டிருந்தது. மானுக்குத் தன் குட்டிகளே விட்டுப் பிரிய மனமே இல்லே. அவற்றிற்கு ஆபத்து வராமல் காப்பாற்ற வேண்டு மென்று அது பக்கத்திலேயே இருந்தது. இப்படி ஒரு நாளாயிற்று, இரண்டு நாளாயிற்று. அதற்குப் பசி எடுத்தது. தாகமும் ஏற்பட்டது. அதல்ை கொஞ்சம் புல் மேய்ந்துவிட்டுத் தண்ணீர் குடிக்கலாமென்று ஓர் ஓடையை நோக்கிச் சென்றது. பாதிவழி செல்லுகின்றபோதே அதற்குக் குட்டிகளின் நினேப்பு