பக்கம்:மாயக் கள்ளன்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15 வந்தது. குட்டிகளுக்கு எதாவது தீங்கு வந்துவிடுமோ என்ற கவலேயுண்டாயிற்று. உடனே, திரும்பி வேகமாக ஓடிப்போய்க் குட்டிகளைப் பார்த்தது. அவற்றிற்கு ஒரு தீங்கும் நேரவில்லே. அவை சுகமாகப் படுத்துத் துாங்கிக்கொண்டிருந்தன. மானுக்குக் கவலே நீங்கியது. அது மறுபடியும் ஓடையை நோக்கிப் புறப்பட்டது. பாதி வழியில் மறுபடியும் திரும்பி வந்தது. இப்படிக் குட்டிகளின் நினேப்பாகவே அது கடைசியில் ஒடைக்கு வந்து சேர்ந்தது. அவசரம் அவசரமாகத் தண்ணீர் குடித்துவிட்டுக் குட்டிகளிடம் ஒடிப் போக வேண்டுமென்று அதற்கு ஆசை. அந்த ஆசையால் அது வேகமாகத் தண்ணீருக்குள் முன்கால்கள் இரண்டையும் வைத்துக்கொண்டு, குனிந்து தண்ணீரைக் குடிக்கத் தொடங்கியது. அந்தச் சமயத்தில், சிங்கம் அதன்மீது சளாரென்று பாய்ந்தது. ஒரே அடியில் அடித்து, மானேக் கொன்று, இழுத்துக்கொண்டு போய் விட்டது. சாகும்போதுகூட அந்த மான்தன் குட்டிகளே நிக்னத்துக் கொண்டே கதறி அழுதது. இப்படியாகச் சிங்கம் அந்த மலேக்காட்டிலே விலங்குகளே வதை செய்துகொண்டு திரிந்தது. ஒரு நாள் அந்தக் காட்டிற்கு ஒரு வேட்டைக்காரன் வந்தான். கையிலே துப்பாக்கி வைத் திருந்தான். அந்தச் சிங்கத்தை வேட்டையாட வேண்டு மென்று.அவனுக்கு ஆசை.அவன் பலவகைகளிலே சிங்கத்தைச் சுடுவதற்கு முயற்சி செய்தான். ஆனால், சிங்கம் அவனுக்கு அகப்படவில்லை; த த் தி ர மா கத் தப்பித்துக்கொண்டே இருந்தது. அதல்ை,அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். சரிவாக இருந்த மலேயின் பக்கத்திலே, வசதியான ஓரிடத்திலே, அவன் ஒரு கொழுத்த பசுவைக் கட்டி வைத்தான். பக்கத்திலே ஓர் உயரமான மரம் இருந்தது. அதிலே அடர்த்தியான கிரே களுக்கு நடுவிலே ஓர் ஒளிகட்டு செய்தான். இருட்டானதும் அவன் மரத்தின் மீதேறி, அந்த ஒளியும் கூட்டிற்குள்ளே பதுங்கிக்கொண்டான். கையிலே துப்பாக்கியைத் தயாராக வைத்துக்கொண்டான்.