பக்கம்:மாயக் கள்ளன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பக பாவம், மலேக்காட்டிலே இருப்பதற்குப் பயந்து மிரண்டு கிடந்தது. இருட்டிலே எதாவது ஆபத்து வருமோ என்று அது நான்கு பக்கங்களிலும் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தது. எத்தனேயோ விதமான சத்தங்க ளெல்லாம் காட்டிலே எழுந்தன. அவற்றைக் கேட்டுப் பழக்க மில்லாததால், பசு பயந்து மிரண்டு துள்ளிக் குதித்தது. ஆனால், கயிறு பலமாக இருந்ததால், அது கயிற்றை அறுத்துக்கொண்டு ஒட முடியவில்லே.

இப்படி அது பயந்து கிடக்கும்போது, சிங்கம் அங்கே வந்தது. நன்ருகக் கொழுத்திருந்த பசுவைக் கண்டதும் அதற்கு நாக்கிலே நீர் ஊறிற்று. அது ஒரே பாய்ச்சலாகப் பசுவின்மேல் பாய்ந்து, தனது முன் கால்களால் அதை அடித்து, மண்டையைப் பிளந்துவிட்டது. பசு உயிரற்றுக் கீழே விழுந்தது. பிறகு, நிதானமாகச் சிங்கம் அந்தப் பசுவைத் தின்ன ஆரம்பித்தது. மரத்தின்மீது ஒளிந்திருந்த வேட்டைக்காரன் இதுவரையில் அசையாமல் சும்மா இருந்தான். சிங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/19&oldid=1276959" இலிருந்து மீள்விக்கப்பட்டது