பக்கம்:மாயக் கள்ளன்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 அது எவ்வித யோசனேயும் செய்யாமல் தாவித் தாவி முன்னல் பாய்ந்துகொண்டே இருந்தது. வேட்டைக்காரன் பசுவைக் கட்டிய இடம் ஒரு மலேச்சரிவு என்று முன்னமேயே சொன்னேன். அந்தச் சரிவிலே சிங்கம் இவ்வாறு பாய்ந்ததால், அங்கிருந்து அது கீழே மிகவும் ஆழமான ஒரு புதருக்குள்ளே சுருண்டு தொப்பென்று விழுந்தது. அதன் உடம்பிலிருந்த எலும்புகளெல்லாம் சுக்கு றுருக நொறுங்கிப்போப்விட்டன. சிங்கம் பிணம்போல் அசைவற்றுக் கிடந்தது.