பக்கம்:மாயக் கள்ளன்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. சின்னப் பாப்பா சிங்கமாக உருவமெடுத்த ஆத்மரங்கன் அந்த ஆழமான புதருக்குள்ளே எலும்பு நொறுங்கிக் கிடந்தான் சிங்கத்தின் பலமெல்லாம் போய்விட்டது; அதன் மூச்சே நின்றுவிட்டது போல அது அசையாமல் கிடந்தது. கரு வண்டுகளும் தேள்களும் அதைக் கடித்தன. தனக்கு யாருமே நிகரில்லையென்று காட்டிலே ராஜாவைப் போலத் திரிந்த அந்தச் சிங்கத்தால் இப்பொழுது ஒன்றுமே செய்ய முடியவில்லை; வண்டுகளைக்கூட விரட்ட முடியவில்லை. தன் னுடைய பலமெல்லாம் உபயோகமில்லை என்று சிங்கத்திற்குத் தெரிந்துவிட்டது. இவ்வாறு துன்பப்பட்டுக்கொண்டு சிங்கம் வெகு காலம் அந்த இருட்டுப் புதருக்குள்ளே கிடந்தது. அதல்ை துன்பம் தாங்க முடியவில்லே. எத்தனேயோ கொடுமைகள் செய்ததற்கு அப்போது தண்டனே அனுபவிப்பதாக அதற்குப் புலப்பட்டது. "ஆமாம், எனக்கு நன்ருக வேணும். நான் எத்தனே கொல் செய்திருக்கிறேன். மான், பசு முதலான சாதுவான விலங்குகளே யெல்லாம் கொன்றிருக்கிறேன். அதல்ைதான் இப்பொழுது எனக்குப் பெரிய துன்பம் எற்பட்டிருக்கிறது என்று அது தனக்குத் தானே சொல்லிக்கொண்டது. தாய் தந்தையரிடம் போயிருந்தால் சுகமாக இருந்திருக்கலாம்; அவர்களேயும் மறந்துவிட்டதால்தான் தனக்குத் துன்பம் ஏற்பட்டிருப்பதாக அது நினத்தது. உலகத்திலே மனித வடிவம்தான் சிறந்தது. மனிதன் எல்லாவற்றையும் அடக்கிவிடுகிருன். சிங்கத்தின் பலம்கூட அவனுக்கு முன்ல்ை நிற்க முடியாது. அந்த மனித வடிவமே எல்லாவற்றிலும் உயர்வானது. அதை எடுத்தால்தான் மலேயுச்சியை அடைய முடியும்’ என்று சிங்கத்திற்கு ஒரு புதிய அறிவு வந்தது.