பக்கம்:மாயக் கள்ளன்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 இப்படி அறிவு வந்ததும் சிங்கத்தின் துன்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாயிற்று. புதரை மூடியிருந்த இருட்டும் நீங்கிற்று. இனிமேல் சிங்க உருவமே கூடாது என்று உறுதி யாகத் தீர்மானம் செய்துகொண்டு,ஆத்மரங்கன் மலையடிவாரத் திற்கு வந்து சேர்ந்தான். அங்கே வந்து, ஒரு மனிதக் குழந்தையாக உருவ மெடுத்தான். அப்படி உருவம் எடுத்தவுடனே அவனிடம் மாயக்கள்ளன் வந்து சேர்ந்தான். அவனேப்பற்றிக் குழந்தைக்கு ஒன்றும் தெரியாது. இருந்தாலும், அவைேடு சேர்ந்திருப்பது குழந்தைக்குப் பிரியமாகத் தோன்றியது. குழந்தைக்கு முதலிலே மலேயுச்சிக்குப் போய்த் தாய் தந்தையரை அடைய வேண்டுமென்ற ஆசை அதிகமாக இருந்தது. அதனல், அது உலகத்தைக் கவனிக்கவில்லே. மலேயுச்சியில் இருப்பதாகவே எண்ணிக்கொண்டு உலகத்தை மறந்து கிடந்தது. எதையோ பார்த்துச் சிரிக்கும். யாருடனே பேசுவதுபோல ஆ ஊ என்று சொல்லும். பிறகு, யாரையோ காணுதது போலத் திடீரென்று அழத் தொடங்கிவிடும். இப்படியிருந்த குழந்தைக்கு மாயக்கள்ளன் விதவிதமாக ஆசைகளையெல்லாம் காட்டினன். உலகத்திலே உள்ள பொருள் களையெல்லாம் ஒவ்வொன்ருகக் காட்டி, அதன் கவனத்தைக் தன்னிடம் இழுத்தான். அவனுடைய தந்திரமெல்லாம் குழந்தைக்குத் தெரியாது. அவன் காட்டுகின்ற மாயக்காட்சி களேயெல்லாம் கண்டு குழந்தை சொக்கிப்போய்விட்டது. அவனுடைய மாய வலையில் சிக்கிக்கொண்டது. இருந்தாலும், குழந்தை மலேயுச்சியை மறந்துவிடவில்லே. அதை நிக்னத்துக்கொண்டு ஒரு நாள் அது விடாமல் அழத் தொடங்கிற்று. அதைக் கண்டு மாயக்கள்ளன் அதற்கு ஓர் அழகான கதை சொல்ல ஆரம்பித்தான். கதையென்ருல் குழந்தைக்குப் பிரியம். அதல்ை அது அழுகையை நிறுத்தி விட்டுக் கதையைக் கேட்க ஆரம்பித்தது. மாயக்கள்ளன் கதை சொல்லுகிருன்: