பக்கம்:மாயக் கள்ளன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மந்திரவாதியின் தந்திரம் தேவதைக்குத் தெரியாமலிருக் குமா ? தேவதை உடனே ஒரு அணிலாக மாறி,மாம்பழத்தைக் கடிக்கத் துள்ளித்துள்ளி భభ్ மரக்கிளேகளில் ஓடிற்று. மந்திரவாதி உட னே ஒரு புருவாக உருவ மெடுத்து வானத்திலே வேகமாகப் பறந்தான். தேவதை ராஜாளியாக திதி: மாறிப் பின்தொடர்ந் ! தது. ராஜாளியைக் கண்டால் புருவுக்கு ரொம்பப் பயம், புருவாக வடிவமெடுத்த மந்திரவாதி, தன் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டது என்று அறிந்து, நடுநடுங்கிக் கலங்கின்ை. தன் வயிற்றுக்குள்ளிருக்கும் சின்னப் பாப்பாவை விட்டால்தான் தப்ப முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. அதனல், புருவாக மாறிய அவன், தன் வயிற்றிலிருந்த வண்டை வாய்க்குக் கொண்டுவந்து, கீழே துப்பிவிட்டுப் பறந்தோடினன்.

வண்டு இதுவரையிலும் மூச்சு விடமுடியாமல் துன்பப் பட்டுக்கொண்டிருந்தது. அதனுல் அது மயங்கிப்போய்விட்டது. புருவின் வாயிலிருந்து வெளிப்பட்ட பிறகும் அதன் மயக்கம் தெளியவில்லே. சிறகை விரித்துப் பறக்கவும் அதற்கு முடிய வில்லே. ஆதலால், அது உயரத்திலிருந்து கீழே வேகமாக விழுந்துகொண்டிருந்தது. அதைக் கண்டு தேவதை புருவைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/27&oldid=1276964" இலிருந்து மீள்விக்கப்பட்டது