பக்கம்:மாயக் கள்ளன்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25 துரத்திப் பிடிப்பதை விட்டுவிட்டு, ஒரு வண்ணத்துப்பூச்சியாக (வண்ணுத்திப்பூச்சியாக) வடிவமெடுத்து வேகமாக வந்து, கீழே விழுந்துகொண்டிருந்த வண்டைத் தன் சிறகுகளுக்கு இடையிலே தாங்கிக்கொண்டது. அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகிலே எத்தனேயோ அழகான வர்ணங்கள் எல்லாம் இருந்தன. அதன் உடம்பே பட்டுப்போல மெதுவாக இருந்தது. அதைக் கண்டு பொன் வண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தது. வண்ணத்துப்பூச்சி பொன்வண்டைத் தாங்கிக்கொண்டு, வானத்திலே மெதுவாகப் பறந்து சென்று, அதற்குப் பல விதமான காட்சிகளையெல்லாம் காட்டிற்று. பொன்வண்டுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அது தனது சிறகை விரித்துப் பறப்பது போல அசைத்துப் பலவிதமான ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. கடைசியாகத் தேவதை சின்னப் பாப்பாவைப் பத்திரமாக அதன் அம்மாவிடம் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. சின்னப் பாப்பா தாயின் மடியிலே படுத்துக்கொண்டு, குதூகலமாகக் கைகளையும் கால்களேயும் ஆட்டிக்கொண்டு, வியோடிக்கொண்டு சந்தோஷமாக இருந்தது. மாயக்கள்ளன் சொன்ன இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே, ஆத்மரங்களுகிய குழந்தை நன்ருகத் தூங்கி விட்டது. அதைக் கண்ட மாயக்கள்ளன் மகிழ்ச்சியடைந்தான். 'இந்தக் குழந்தை நான் சொன்ன கதையைக் கேட்டு மயங்கி, என் மாய வலையில் விழுந்துவிட்டது. இனிமேல் இது என் பிடியை விட்டுத் தப்பிப் போக முடியாது’ என்று கூறிக் கொண்டு, உரக்கச் சிரித்தான். அவனுடைய முகத்திலே வஞ்சகமான பார்வை தோன்றிற்று. தனக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக அவன் துள்ளிக் குதித்தான். 'இனி மேல் இந்தக் குழந்தை என்றைக்கும் எனக்கு அடிமையாக இருக்கும். இது என் மாய வயிைல் மாட்டிக்கொண்டது” என்று மறுபடியும் சொல்லிக்கொண்டு சிரித்தான்.