பக்கம்:மாயக் கள்ளன்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 மயிர் அடர்த்தியாக வளர்ந்து அதன் அழகை அதிகப் படுத்திற்று. கறுப்பு நிறமும் வெள்ளே நிறமும் மாறி மாறி அதன் உடம்பிலே அழகாக இருந்தன. அந்த நாய்க்குச் சடையன் என்று முத்து பெயர் வைத்திருந்தான். சடையன் எப்பொழுதும் முத்துவிடமே இருக்கும். அவன் போகின்ற இடங்களுக்கெல்லாம் அது போகும். முத்து பள்ளிக்கூடம் போனல் அது வெளியிலே அவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கும். இரவிலே படுத்துறங்கும் போது கூட அது அவனே விட்டுப் பிரியாது. முத்து மரமேறுவதிலே கெட்டிக்காரன். எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும் அவன் அதன்மேலேறி உச்சாணிக்குச் சென்றுவிடுவான். அவன் மரத்திலேறும்போது சடையன் மரத்தடியில் நின்று கவலேயோடு பார்த்துக்கொண் டிருக்கும். முத்து கீழே விழுந்துவிடக்கூடாது' என்றுதான் அதற்குக் கவலே. சில வேளைகளில் அது கவலேயால் குரைத்துக் கொண்டு மரத்தடியில் அங்குமிங்கும் ஓடும். கீழே இறங்கி வரும்படி முத்துவுக்குச் சொல்லுவது போலக் கத்தும். "சடையா, கவக்லப்படாதே. நான் விழமாட்டேன்’ என்று முத்து கூறுவான். சடையன் தன்னிடம் மிக அன்போ டிருப்பதை அறிந்த முத்துவுக்கு ஒரே ஆனந்தம். முத்து பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகச் செல்லாததால் அவனுக்குப் படிப்பு நன்ருக வரவில்லே. அதல்ை அவைேடு பள்ளியில் சேர்ந்து எழுதப் படிக்கத் தொடங்கியவர்கள் ஏழாம் வகுப்புக்குச் சென்றுவிட்டார்கள். ஆல்ை, முத்து மட்டும் மூன்ரும் வகுப்பில் இருந்தான். மூன்ரும் வகுப் பில் படிப்பவர்கள் எல்லாம் சிறு பிள்ளைகள். முத்து உயரமாக வளர்ந்து பெரியவனுக இருந்தான். சிறுபிள்ளைகளோடு ஒரே வகுப்பில் உட்கார்ந்து படிப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது. மேலும், வகுப்பிலே உபாத்தியார் கேட்கும் கேள்வி களுக்கு அந்தப் பிள்ளைகள் அநேகமாகச் சரியான விடை கூறி விடுவார்கள்: முத்துவால் ஒரு கேள்விக்கும் பதில் கூற முடியாது; அதனல், அவனே எல்லோரும் மக்குமுத்து என்று