பக்கம்:மாயக் கள்ளன்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3i கேலி செய்வார்கள். அப்படிச் சிறுபிள்ளைகள் கேலி செய்யும் போதும் அவனுக்கு மேலும் அவமானமாக இருக்கும். ஒரு நாள் மாலே நேரத்திலே, பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்திலிருந்த மைதானத்தில் பல பேர் விளையாடிக்கொண் டிருந்தார்கள். அவர்களில் சில சிறு பிள்ளைகள் ஒன்ருகச் சேர்ந்துகொண்டு முத்துவை வெகுநேரம் வரையில் கேலி செய்தார்கள். 'மக்கு முத்து, மக்கு முத்து’ என்று கூவினர்கள். "மக்கு முத்து, நாலும் நாலும் எத்தனே, சொல்லு என்று கூவிக் கொண்டே ஒரு குண்டுப் பையன் முத்துவிடம் வந்தான். இது கூட மக்கு முத்துவுக்குத் தெரியவில்லே’ என்று மற்ற பிள்ளைகள் சொல்லி உரக்கச் சிரித்தார்கள். முத்துவுக்குக் கோபம் வந்துவிட்டது. குண்டுப் பையனே அவன் ஓங்கி அடித்தான். குண்டுப் பையன் சிரிப்பதை நிறுத்திவிட்டுக் கண்ணேப் பிசைந்துகொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். உடனே,மற்ற பிள்ளைகள் எல்லோரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள். அந்தப் பிள்ளைகள் நேராக முத்துவின் வீட்டுக்குப் போப், அதற்கு முன்னுல் நின்றுகொண்டு, மக்கு முத்து வீடு, மக்கு முத்து வீடு என்று சத்தம் போட்டார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்டு முத்துவின் தாயார் வெளியே வந்து பார்த்தாள். என் என் மகனே மக்கு என்று சொல்லுகிறீர்கள்?’ என்று அவள் கோபத்தோடு கேட்டாள். 'உன் மகன் மக்குத்தான். நாலும் நாலும் எத்தனே என்று கூட அவனுக்குத் தெரியாது. அவன் சுத்த மக்கு என்று சொல்லிவிட்டுச் சிறுவர்கள் ஓடிவிட்டார்கள். இதைக் கேட்டு அவள் மிகுந்த விசனமடைந்தாள். தன் மகன் மக்காக இருக்கிருனென்று நினத்து,வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்து, கண்ணிர் விட்டு அழுதுகொண்டிருந்தாள். முத்து வீட்டுக்குத் திரும்பி வந்ததையும் அவள் கவனிக்கவில்லே. தன் தாய் கண்ணிர் விடுவதை முத்து பார்த்துவிட்டான். 'எனம்மா அழுகிருய்?’ என்று அவன் கவலேயோடு கேட்டான்.