பக்கம்:மாயக் கள்ளன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 முத்து இரவில் வெகுநேரம் வரையில் நடந்தான். அவனுக்குக் கால் வலியெடுத்தது. தூக்கத்தால் கண்கள் சுழன்றன. அதனல் அவன் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்க லானன். சடையன் அவனுக்குக் காவலாகப் பக்கத்தில் இருந்தது. அடுத்த நாள் பொழுது நன்ருக விடியுமளவும் முத்து தூங்கிவிட்டான். அவன் எழுந்திருக்கும்போது பல பேர் கழனி யில் வேலை செய்யச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் முத்துவிடம் வந்து தம்பி, இந்த மரத்தடியிலா படுத்துத் தூங்கினப் ?’ என்று கேட்டான். ஆமாம் என்று கொட்டாவி விட்டுக்கொண்டே முத்து பதில் சொன்னன். “நீ நல்ல வேளையாக உயிர் தப்பிய்ை. இங்கே படுத்துத் தூங்கியிருக்கவே கூடாது' என்ருன் அந்த மனிதன். "ஏன் ?’ என்று முத்து ஆச்சரியத்தோடு கேட்டான்.

  • தம்பி, அதோ தெரிகிறதே அந்த ஊருக்குள்ளே தினந் தோறும் இரவு வேளையில் ஒரு புலி வருகிறது. யாருக்கும் தெரியாமல் அது வந்து, ஆடுமாடுகளேயும் மனிதர்களேயும் கொன்று தூக்கிக்கொண்டு போய்விடுகிறது. அதல்ை இரவானுல் நாங்கள் வீட்டை விட்டு வெளியிலே வருவதே இல்க் என்று அவன் தெரிவித்தான்.

"அந்தப் புலியை வேட்டையாடிக் கொல்லக் கூடாதா ?” என்று முத்து கேட்டான். “எத்தனேயோ பேர் முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள். ஒருவராலும் அதைக் கொல்ல முடியவில்லே. அதை வேட்டை யாடப் போனவர்களில் பல பேர் திரும்பி வரவேயில்லை. அந்தப் புலி அவர்களேயே கொன்றுவிட்டது' என்று அவன் விசனத் தோடு சொன்னன். "அந்தப் புலி எங்கிருந்து வருகிறது? பகலிலே ஊருக்குள் அது தங்காதோ?’ என்று முத்து மறு படியும் கேட்டான். шот. 5.—3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/36&oldid=867680" இலிருந்து மீள்விக்கப்பட்டது