பக்கம்:மாயக் கள்ளன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 'ஊருக்கு நாலேந்து மைல் தூரத்தில் ஒரு பெரிய காடு இருக்கிறது. அங்கே மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. அங்கிருந்துதான் அந்தப் புலி வருகிறது என்ருன் அவன். "நான் அந்தப் புலியைக் கொல்லுகிறேன்’ என்று உற்சாக மாகப் பேசினன் முத்து. 'தம்பி, நீ இந்தக் காரியத்தில் இறங்காதே. உன் உயிருக்கே ஆபத்து வந்துவிடும். அந்தப் புலி மிகப் பொல்லா தது. பெரிய பெரிய வேட்டைக்காரர்கள் எல்லாம் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை’ என்று அந்த மனிதன் எச்சரிக்கை செய்தான். ஆனால், முத்து மனம் தளரவில்லை. அந்தக் கொடிய புலியைக் கொன்று, கெட்டிக்காரன் என்று பெயரெடுக்க வேண்டும்என்று நினத்தான். மக்கென்று எல்லோரும் நினேக்கும் படி உயிர் வாழ்வதைவிட, இறந்து போவதே நல்லதென்றும் அவனுக்குத் தோன்றியது. அவன் தன் நாயை அழைத்துக் கொண்டு உடனே அந்த அடர்ந்த காட்டுக்குப் புறப்பட்டான். காட்டுக்குள் நுழையும்போதே சடையனுக்கு முத்துவின் எண்ணம் விளங்கிவிட்டது. முத்துவுக்கு ஆபத்து வருமென்று நினத்தது. அது அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, அவனேக் காட்டுக்குள் போகவிடாமல் தடுத்தது. காட்டுக்குள் புலி இருப்பதை அது எப்படியோ தெரிந்துகொண்டது. "சடையா, என் தடுக்கிருப் ? நான் புலியைக் கொன்று கெட்டிக்காரனுகப் போகிறேன். இல்லாவிட்டால் இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு முத்து தன் நாயின் முதுகில் தட்டிக் கொடுத்தான். மறுபடியும் சடையன் அவனேத் தடுக்க முயன்றது. ஆனல், முத்து உறுதியோடு காட்டுக்குள் நுழைந்தான். சடையா, நீ ஊருக்குத் திரும்பிப் போ. நான் புலியைக் கொல்லாமல் இந்தக் காட்டை விட்டு வெளியே வரமாட்டேன்’ என்று அவன் சொல்லிவிட்டு அடியெடுத்து வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/37&oldid=867681" இலிருந்து மீள்விக்கப்பட்டது