பக்கம்:மாயக் கள்ளன்.pdf/38

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35 சடையன் அவன் பின்னலேயே சென்றது. முத்துவின் உறுதியை அது நன்ருக அறிந்துகொண்டது. அதனுல் அது அவனுக்கு உதவி செய்ய உடனே ஆரம்பித்தது. சடையன் பல இடங்களுக்குச் சென்று மோப்பம் பிடித்தது. கடைசியில் புலி வருகின்ற வழியை அது கண்டுபிடித்துவிட்டது. அந்த வழியிலே அது பல தடவை முன்னும் பின்னும் ஒடிக் காண் பித்தது. அதன் செயலிலிருந்து புலி வருகின்ற பாதையை முத்து அறிந்துகொண்டான். அந்தப் பாதை மிகக் குறுகலாக இருந்தது. இரு பக்கங்களிலும் புதர்களும் மரங்களும் நெருங்கியிருந்தன. அப்பாதைக்குப் பக்கமாக ஓரிடத்திலே மிக உயரமான ஓர் ஆலமரம் தென்பட்டது. அந்த மரத்தின் கிளேயொன்று புலியின் பாதைக்கு நேர் மேலே உயரத்தில் சென்றது. முத்து அந்தக் கிளேயின்மீது ஏறிப் பார்த்தான். பிறகு, கீழே இறங்கி வந்து, ஒரு பெரிய கல்லேத் தூக்கி முதுகில் வைத்துக் கட்டிக் கொண்டு மறுபடியும் மரத்திலேறி அந்தக் கிளேக்குப் போனன். அவன் செய்வதையெல்லாம் சடையன் நன்ருகக் கவனித் துக்கொண்டிருந்தது. அதற்கு அவனுடைய எண்ணம் விளங்கி விட்டது. அதல்ை அது மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தது. முத்து வெகு நேரம் யோசனே செய்தான். பிறகு, ஆல. மரத்திலிருந்து இறங்கி வந்து, புலியால் துன்பப்படுகின்ற ஊருக்குப் போன்ை. அங்கே சில பெரிய மனிதர்களைக் கண்டான். அவர்களிடம் தனக்கு ஒரு கோணிப்பை வேண்டு மென்று கேட்டான். 'கோணிப்பை எதற்கு ?’ என்று அவர்கள் கேட்டார்கள். "நான் அந்தப் புலியை வேட்டையாடப் போகிறேன்’ என்று பதில் சொன்னன் முத்து. அதைக் கேட்டதும் எல்லோரும் அவனேக் கேலி செய்யத் தொடங்கினர்கள். புலியைப் பிடித்துக் கோணிப்பைக்குள் போட்டுக் கட்டிக்கொண்டு வரப்போகிருயா ?’ என்று ஒருவன் கேட்டான்.