பக்கம்:மாயக் கள்ளன்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36

  • நீ புலியைக் கோணிப்பையில் கட்டிவை. உன் தலையில் அந்தப் பையைத் தூக்கி வைக்க நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் மற்ருெருவன்.

‘புலியைக் கோணிப்பையில் கட்ட முடியுமா ? நீ சுத்த மக்கு’ என்ருன் வேருெருவன். இப்படி அவர்கள் கேலி செய் வதை முத்துப் பொருட்படுத்தவில்லை. அவர்களிடம் பல தடவை வற்புறுத்திக் கேட்டு, கடைசியாக ஒரு கோணிப்பையை வாங்கிக்கொண்டான். உடனே காட்டுக்கு வேகமாகப் புறப் பட்டான். சடையனும் பின்தொடர்ந்தது. முத்து ஆலமரத்திற்கு வந்து, மறுபடியும் ஒரு பெரிய கல்லேத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது ஏறினன். புலி வரு கின்ற பாதைக்கு மேலாக இருந்த கிளேக்குச் சென்று, அங்கே கோணிப்பையை இரண்டு சிறிய கிளேகளுக்கு மத்தியிலே கீழே விழாதபடி வைத்தான். அந்தப் பைக்குள் தான் கொண்டுவந்த கல்லேப் போட்டான். பிறகு, கீழே இறங்கி வந்து, வேருெரு கல்லே எடுத்துக்கொண்டு மறுபடியும் மரத்திலேறினன். இவ்வாறு அவன் பல தடவை செய்து, பல கற்களே மரத்தின்மீது கொண்டுபோய்க் கோணிப்பையில் போட்டு நிறைத்து, அதை நன்ருகக் கட்டினன். ஒரு சிறிய மரக் கொம்பை வெட்டி எடுத்துவந்து, தன் கையில் தடியாக வைத்துக் கொண்டான். பிறகு, மரத்தின்மீதேறிக் கோணிப்பைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். சடையன் மரத்தடியில் எச்சரிக்கை யோடு படுத்திருந்தது. பொழுது விழுந்து நடுச்சாமம் ஆகும்வரையில் அங்கு புலி வரவில்லை. அதற்குப் பிறகு, அது மெதுவாகச் சுற்றிலும் உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தது. முத்து உட்கார்ந் திருக்கும் மரக்கிளேக்கு நேராக அது வந்ததும், சடையன் அதற்கு முன்பாகச் சறறு தூரத்திலே பாதையில் போய் நின்று, உர்ர் என்று உறுமிற்று. ஒரு சிறிய நாய் தனக்கு முன்னல் பயமில்லாமல் நின்றுகொண்டு உறுமுவதைக் கண்டு புலிக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. அது சடையன் மேல் பாய்ந்து