பக்கம்:மாயக் கள்ளன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அதைக் கொல்வதற்காக வாலை முறுக்கிக்கொண்டு, குறி பார்த்துத் தயாராக நின்றது. அந்தச் சமயத்திலே, மரக்கிளை மேலிருந்த முத்து, தன் கையிலிருந்த தடியைக்கொண்டு நெம்பி,கல் மூட்டையைக் கீழே தள்ளினான். கல்மூட்டை சதக்' என்று புலியின் தலைமேல் விழுந்தது. புலியின் தலை சுக்கு நூறாக நொறுங்கிவிட்டது. அதனால் அது அந்த இடத்தி லேயே விழுந்து இறந்தது. தனது திட்டம் பலித்ததைக் கண்டு முத்து ஆனந்தக் கூத்தாடினான். சடையனும் துள்ளிக் குதித்தது.

அடுத்த நாள் காலையிலே ஊர்மக்களெல்லாம் புலி இறந்த செய்தியைக் கேட்டுக் காட்டுக்குள் தைரியமாக வந்து பார்த் தார்கள். அவர்கள் முத்துவைப் புகழ்ந்தார்கள். அவனைக் கெட்டிக்காரன் என்று கொண்டாடினார்கள். அவனுடைய தாயாரையும் அந்த ஊருக்கே வரவழைத்து அவளுக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் கொடுத்து உதவினார்கள். முத்து கெட்டிக்காரனாக இருப்பதை அறிந்த அவன் தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். தாயும் மகனும் அந்த ஊரி லேயே சுகமாக வாழ்ந்து வந்தார்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/40&oldid=1276991" இலிருந்து மீள்விக்கப்பட்டது