பக்கம்:மாயக் கள்ளன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 பெயர் ஞான மூர்த்தி. அவன் மிகவும் கெட்டிக்காரன். ஒரு

விஷயத்தை அவன் ஒரு தடவை கேட்டால், அல்லது படித்தால் போதும், அது அப் படியே அவன் மனத்தில் பதிந்து விடும். அதனால் அவன் எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவ னானான். அவனுக்குத் தெரி யாத சாஸ்திரமே இல்லை என்று சொல்லும்படியாக அவன் எல்லாவற்றையும் படித்தான். - -- ஒரு நாள் முனிவர் அவனிடத்திலே வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டார். 'ஞான மூர்த்தி, உலகத்திலே உள்ள சமுத் திரங்களிலும், ஆறுகளிலும் மொத்தமாக உள்ள தண்ணீர்த் துளிகள் எத்தனை என்று, யாராவது உன்னைக் கேட்டால் நீ என்ன பதில் கூறுவாய்?' என்று அவர் கேட்டார். 'சமுத்திரங்கள், ஆறுகள் ஆகியவற்றின் அடியிலும், கரையிலும் உள்ள மணலின் எண்ணிக்கை எத்தனையோ அத்தனை தான் தண்ணீர்த் துளிகளும் என்று பதில் சொல் லுவேன்' என்றான் ஞானமூர்த்தி. அதைக் கேட்டு முனிவர் மகிழ்ச்சியடைந்தார். 'நீ இனி மேல் கல்வி கற்க வேண்டியதில்லை. நீ சிறந்த அறிவாளியாகி விட்டாய். உலகத்திலே பலருக்கும் பயன்படக்கூடிய வழியிலே உனது அறிவைக்கொண்டு சேவை செய். போய் வா என்று கூறி, அவனுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்படி இறைவனைத் தொழுதார். ஞான மூர்த்தி குருநாதரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். அவனுடைய கல்வி அறிவைக் கண்டு எல்லோரும் ஆச்சரியம் அடைந்தார்கள். அவனைப் போற்றிக் கொண்டாடினார்கள். அதனால், ஞானமூர்த்தி மிகுந்த கர்வம் அடைந்தான். தனக்கு யாரும் நிகரில்லை என்று எண்ணலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/43&oldid=1276992" இலிருந்து மீள்விக்கப்பட்டது