பக்கம்:மாயக் கள்ளன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 இவ்வாறு எண்ணம் உண்டாகவே, அவன் மக்களுக்குச் சேவை செய்வதை மறந்துவிட்டான். தனது குருநாதர் இருக்கும் வனத்திற்குப் பக்கத்திலேயிருந்த ம ற் .ெ ரு ரு வனத்திலே ஓர் ஆச்ரமம் அமைத்தான். அதில் இருந்து கொண்டு அவன் எல்லோரையும் வாதுக்கு இழுத்தான். யார் வேண்டுமானலும் என்னே எந்தவிதமான கேள்வியும் கேட்க லாம். அந்தக் கேள்விக்கெல்லாம் நான் சரியான பதில் சொல் லுவேன். எனது பதில் சரியானதாக இருந்தால் கேள்வி கேட்க வந்தவர் எனக்கு அடிமையாக வேண்டும். நான் சரியான பதில் கூறவில்லையென்ருல் நான் அவர்களுக்கு அடிமையாவேன்’ என்று அவன் எங்கும் தெரிவித்தான். தன்னுடைய ஆசிரமத் திலே கொடிகட்டித் தனது கல்விப் பெருமையை எல்லோருக்கும் தெரியும்படி செய்தான். பல பேர் அவனுடன் வாதாட வந்தார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவன் சரியான விடை சொல்லி அவர்களே அடிமையாக்கிவிட்டான். யாராலும் அவனே வெல்ல முடியவில்லே. ஞானமூர்த்திக்கு இப்படிப் பல வெற்றிகள் கிடைக்கவே, அவனுடைய கருவம் மேலும் அதிகமாயிற்று. அவன் தனக்குக் கலைக்கடல், கல்விக் களஞ்சியம் என்றிவ்வாறு பல பட்டங்களைச் சூட்டிக்கொண்டான். அவனுடைய செய்கைகளைப்பற்றியெல்லாம் அவனுடைய குருநாதரான முனிவர் கேள்விப்பட்டார். அவருக்கு மிகுந்த வருத்தம் உண்டாயிற்று. கல்வி கற்றவர்கள் அடக்கமாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய கல்விக்குச் சிறப்பாகும்’ என்று அவர் தம்மைச் சூழ்ந்திருந்த சிஷ்யர் களிடம் கூறினர். ஞானமூர்த்திக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர் நினேத்து, அதற்கேற்ற சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் யாரோ ஒரு பையன் அலங்கோலமாக முனிவ. ருடைய ஆச்ரமத்தை நோக்கி ஓடி வந்தான். அ வ ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/44&oldid=867697" இலிருந்து மீள்விக்கப்பட்டது