பக்கம்:மாயக் கள்ளன்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 வேதாந்தம் பெரிய புலவன்போல் ஆடை அணிந்து கொண்டு ஞானமூர்த்தியிடம் போனன். போனதும் அவன், தான் மனப்பாடம் செய்து வந்த பாட்டைச் சொன்னன். "ஆடெங்கே? மாடெங்கே ? அவை போட்ட குட்டியெங்கே ? வீடெங்கே ? வேட்டியெங்கே ? வேதாந்தம் பேசுகிறேன் விளக்குவீரே.” இப்படிப் பாட்டைச் சொல்லிவிட்டு, அவன் ஞான மூர்த்தியின் முன்னுல் அமர்ந்தான். வேதாந்தம் தனது ஆடுகளையும், மாடுகளேயும், அவற்றின் குட்டிகளேயும் பற்றித்தான் இந்தப் பாட்டில் கேள்வி கேட்டான். தனது வீடு எங்கே இருக்கிறதென்றும் கேட்டான். இடுப்பி லிருந்து நழுவிப்போன வேட்டியைப்பற்றியும் கேட்டான். இந்தப் பாட்டைச் சொல்லியதும் அவன் முனிவர் கூறி யனுப்பியபடி மெளனமாக உட்கார்ந்திருந்தான். அவன் மறுபடியும் வாய் திறக்கவே இல்லே. ஞானமூர்த்தி அவன் சொன்ன பாட்டைக் கேட்டதும் கலங்கிப்போன்ை. வேதாந்தம் பேசுவதாக அவன் சொல்லுவதால், அந்தப் பாட்டில் ஏதோ மறைவான பொருள் இருப்பதாக அவன் நினத்தான். எதிரில் உட்கார்ந்திருக்கும் வேதாந்தத்தின் ஆடைகளைக் கண்டும் அவன் ஏமாந்து போனன். ஆட்டையும் மாட்டையும் பற்றித் தன்னிடம் யாரும் கேட்கமாட்டார்கள் என்றும் நிக்னத்தான். ஆடு, மாடு, வீடு, வேட்டி என்று சொல்வதிலே மறைவான வேருெரு பொருள் இருக்கிறதென்று அவன் சந்தேகப்பட்டான். எவ்வளவு நேரம் யோசனை செய்தும் அவனுல் அந்தப் பாட்டின் உண்மையான பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனுல் பதில் சொல்லவும் முடியவில்லை. ஞானமூர்த்தியின் கர்வமெல்லாம் அடங்கிப்போய்விட்டது. சிறு பையனுக்குத் தோற்றுப்போளுேமே என்று மனத்திலே