பக்கம்:மாயக் கள்ளன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 வருத்தமடைந்தான். அவனுக்கு அடிமையாக ஆவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் உணர்ந்து விசனப்பட்டான். கர்வத்தால் தனக்கு அவமானம் உண்டானதையும் தெரிந்து கொண்டான். அந்தச் சமயத்திலே ஞான மூர்த்தியின் குருநாதரான முனிவர் அங்கே வந்து சேர்ந்தார், உடனே ஞான மூர்த்தி அவர் பாதங்களில் விழுந்தான். தனது அறியாமைக்காக மன்னிக்கும்படியும் வேண்டினான்.

முனிவர் அவனுக்கு நல்ல அறிவுண்டாகுமாறு உபதேசம் செய்தார். ஞானமூர்த்தி மறுபடியும் முனிவருடைய ஆசிரமத்திற்குச் சென்று, அவருக்குப் பணிவிடை செய்து கொண்டு வாழ்ந்தான். கல்விக்கு முடிவே இல்லை என்று அறிந்துகொண்டு, மேலும் பல சாஸ்திரங்களைப் படிப்பதில் அவன் தனது காலத்தைக் கழித்தான்.” இவ்வாறு மாயக்கள்ளன் கதையைச் சொல்லி முடிக்கும் போது, ஆத்மரங்கன் வழியிலே படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மாயக்கள்ளன் தனது தந்திரம் பலித்த தென்று மகிழ்ந்தான். ஆத்மரங்கனை மறுபடியும் மலையடிவாரத் திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/48&oldid=1276994" இலிருந்து மீள்விக்கப்பட்டது