பக்கம்:மாயக் கள்ளன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பாடுங் குயில் உறங்கிக்கொண்டிருந்த ஆத்மரங்கன் வெகு நேரத்திற்குப் பிறகு எழுந்து பார்த்தான். பழையபடி மலையடிவாரத்தில் இருப்பதை அறிந்தான். மறுபடியும் மலையுச்சிக்குப் போக ஆசை கொண்டான். இந்தத் தடவை அவன் ஓர் இளம்பெண்ணாக உருவமெடுத் தான். அந்த உருவத்தோடு மலையுச்சியிலுள்ள தாய் தந்தை

யரை அடையலாம் என்று நினைத்து, மலைப்படிகளில் அடியெடுத்து வைத்தான். அவன் அப்படி அடி யெடுத்து வைத்ததும் மாயக் கள்ளன் கூடவே புறப்பட் டான். வழக்கம் போல அவன் கதை சொல்ல ஆரம் பித்தான். இளம்பெண்ணாக மாறிய ஆத்மரங்கன், கதையைக் கேட்டுக்கொண்ட மலையேறலானான். பாகம் "கமலாபுரி என்ற ஒரு நகரம் இருந்தது. அதைக் காசி நாதன் என்ற ஓர் அரசன் நீதி தவறாமல் ஆண்டுவந்தான். அவனுடைய மனைவிக்கு வேதவல்லி என்று பெயர். அவர் களுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் சுந்தரி. அவள் மிக அழகாக இருப்பாள். அவளை அரசனும் அரசியும் செல்வமாக வளர்த்து வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/49&oldid=1276995" இலிருந்து மீள்விக்கப்பட்டது